ஒரே ஒரு ஸ்பூன்தான்… கொழுப்பு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்!  

Weight loss
Weight loss
Published on

நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வெந்தயம் மிகவும் முக்கியமானது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் நம் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக உடல் சூட்டை தணிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவில் வெந்தயத்தின் பல்வேறு நன்மைகள் மற்றும் அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியன், இரும்பு போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கின்றன. குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து ரகத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கொழுப்பு உடலில் அதிகமாகச் சேர்வதைத் தடுக்கிறது.‌ குறிப்பாக, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தைத் தடுக்கிறது. 

இதையும் படியுங்கள்:
இந்தியப் பெண்களின் உடல் நலத்துக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க பெண் மருத்துவர்!
Weight loss

உடல் குளிர்ச்சிக்காக வெந்தயம் சாப்பிட போகிறீர்கள் என்றால் அதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. இது உடலுக்கு குளிர்ச்சியை தந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் வெந்தயத்தை பொடியாகி தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். அல்லது வெந்தய பொடியை தயிர், சூப் போன்ற பிற உணவுகளில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. உடல் சூட்டை தணிக்க நீங்கள் வெந்தயம் சாப்பிடப் போகின்றீர்கள் என்றால் அதை இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். 

இதையும் படியுங்கள்:
தீபாவளி பலகாரம் செரிக்க தனியாப் பொடியும், வெந்தய சட்னியும்!
Weight loss

வெந்தயத்தை அப்படியே சாப்பிடும் போது கசப்பாக இருக்கும். எனவே அதை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. சிலருக்கு வெந்தயம் சாப்பிட்ட பிறகு குமட்டலை ஏற்படுத்தும். எனவே, அதற்கு ஏற்றவாறு வெவ்வேறு முறைகளில் அதை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு வெந்தயத்தால் அலர்ஜி ஏற்படலாம். எனவே அவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

வெந்தயம் நம் உடல் நலனை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பொருள். கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் தினசரி தங்கள் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com