ஆரோக்கியமான கூந்தலைப் பெற ஆயுர்வேதம் கூறும் ஐந்து மூலிகை எண்ணெய்!

Healthy hair
Healthy hairhttps://www.onlymyhealth.com
Published on

கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்துக்கொள்ள பெண்கள் அனைவருக்கும் ஆசைதான். ஆனாலும், பல்வேறு காரணங்களின் நிமித்தம் முடி கொட்டுதல், தலையில் பொடுகுத் தொல்லை, வளர்ச்சிக் குறைபாடு போன்ற பிரச்னைகள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. இவற்றிற்கெல்லாம் நிவாரணம் தேடுவதாக எண்ணி இரசாயனம் கலந்த வெவ்வேறு ஷாம்பு வகைகளையும் பிரபலம் அடையாத ஆயில்களையும் உபயோகித்து கூந்தலை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி விடுகின்றனர். ஆயுர்வேதம் இதற்கு தீர்வாக இயற்கை முறையில் தயாரிக்கப்படும் 5 மூலிகை எண்ணெய் வகைகளை கூந்தல் பராமரிப்பிற்கு பரிந்துரை செய்துள்ளது. அவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* வேப்பெண்ணெயில் (Neem oil) ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் அதிகம் உள்ளன. எனவே, இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு சிறந்த எண்ணையாகக் கருதப்படுகிறது.

* முடி கால்களில் ஊடுருவி வேர் வரை சென்று முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கச் செய்வது பிரிங்ராஜ் (Bhringraj oil) எண்ணெய். தலையின் சருமப் பகுதி மற்றும் முடியின் வேர்க் கால்களிலும் இதை நேரடியாக தடவி அழுத்தி தேய்த்து விடலாம். இது சருமத்தின் வறட்சித் தன்மையை நீக்கி பலமடையவும் செய்யும்.

* முடியின் உலர்ந்த தன்மையை நீக்கி, ஈரப்பசையுடன் வைத்துக்கொள்ள உதவுவது தேங்காய் எண்ணெய். இதன் சருமத்துக்குள் நன்றாக உறிஞ்சிகொள்ளப்படும் குணமானது உலர்தன்மை கொண்ட முடியை ஈரத்தன்மையுடன் வைப்பதில் மற்ற எண்ணெய்களை விட சிறப்பாக செயல்படச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
ஜிம் போகாமல் வீட்டிலேயே உபகரணங்கள் இன்றி செய்யக்கூடிய 4 எளிய வொர்க் அவுட்களும், பலன்களும்!
Healthy hair

* நெல்லிக்காய் (Amla) எண்ணையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் நிறைந்துள்ளன. இவை பொடுகை குறைக்கவும் முடியின் இயற்கையான நிறத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

* முருங்கை (Moringa) எண்ணையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கும், இள நரையை தடுக்கவும் உதவுகின்றன. முடி உதிர்வு ஏற்படாத வகையில் ஒரு நல்ல கண்டிஷனராக செயல்பட்டு கூந்தலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்துப் பராமரிக்கும் பணியை சிறப்பாகச் செய்கிறது முருங்கை எண்ணெய்.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தர நினைக்கும் பெண்கள் இந்த 5 மூலிகை எண்ணெய்களை முயற்சித்துப் பலன் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com