Five types of drinks that will instantly energize the body
Five types of drinks that will instantly energize the bodyhttps://tamil.boldsky.com

உடலை உடனே சுறுசுறுப்பாக்கும் ஐந்து வகை பானங்கள்!

Published on

பொதுவாக, குளிர் காலங்களில் உடலானது சுறுசுறுப்பின்றி, வேலை செய்வதிலும் விருப்பமின்றி ஒரு மாதிரியான மந்த நிலையிலேயே லயித்திருக்கும். அம்மாதிரியான நிலையிலிருந்து வெளிவரவும், கூடுதல் சக்தியுடனும் சுறு சுறுப்புடனும், மனதையும் உடலையும் இயங்கச் செய்ய நாம் அருந்த வேண்டிய ஐந்து வகை சூடான பானங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிளாக் டீயில் பால், இஞ்சி, ஏலக்காய், பட்டை, லவங்கம், தேவைப்பட்டால் மிளகு ஆகிய ஸ்பைசஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது மசாலா டீ. இதில் அடங்கியுள்ள  காஃபின், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் மசாலா பொருட்களானவை உடல் உஷ்ணத்தைப் பராமரித்து, சுறுசுறுப்பும் சக்தியும் அளிக்கக் கூடியவை.

மற்றொரு தரமான, அனைவராலும் விரும்பக்கூடிய ஹாட் ட்ரிங்க் காபியாகும். இதில் லாட்டே (latte), காப்பசினோ (cappuccino), அமெரிக்கானோ (Americano) போன்ற வகைகளையோ அல்லது பிளாக் டிக்காஷனில் சிறிது பாலும் சர்க்கரையும் சேர்த்த சாதாரண காபியையோ பருகி மகிழலாம். இது குடிப்பதற்கு எதுவாக இருந்தாலும் அளவோடு குடிப்பதே நன்மை பயக்கும். அளவுக்கு அதிகமானால் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் அபாயம் உண்டு.

காபிக்கு மாற்றாக மற்றொன்று தேவை என்றால் அதற்கு க்ரீன் டீயை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். அதில் காஃபின் அளவு குறைவாக உள்ளது; ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை அதிக சக்தி அளிப்பதுடன், மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன; அறிவாற்றலையும் அதிகரிக்கச் செய்கின்றன.

ஹாட் சாக்லேட் ட்ரிங்க் அதிக சுவையும், உடலுக்கு சௌகரியமான மனநிலையும் தர வல்லது. சக்தியின் அளவையும் கூட்டச் செய்யும். சாக்லேட்களில் பல வகை உண்டு. அவற்றில் கோக்கோவின் அளவு அதிகமுள்ள சாக்லேட் பவுடர் கலந்த பானத்தைத் தேர்ந்தெடுத்து அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகள் தரும்.

இதையும் படியுங்கள்:
சிரிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்!
Five types of drinks that will instantly energize the body

சூடான பாலில் மஞ்சள் பொடி கலந்து குடிப்பது எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் உள்ள ஒரு பானம். இதில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உண்டு. இயற்கையான இனிப்புச் சுவையும் வெதுவெதுப்பும் கொண்டது.

மேற்கூறிய பானங்களில் அவரவர் விரும்பியதை அருந்தி குளிர் காலங்களிலும் சக்தியும் சுறுசுறுப்பும் பெற்று நலமுடன் வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com