உடலின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுவது நமது நரம்பு மண்டலமாகும். இரத்தத்தின் மூலம் ஊட்டச் சத்துக்களையும் ஆக்ஸிஜனையும் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்ல உதவுவது நரம்புகளே. எனவே, நரம்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துப் பராமரிப்பது மிகவும் அவசியம். கோடைக்காலத்தின் வெப்பத்தால் நரம்புகளில் கோளாறு எதுவும் ஏற்படாமலும், இரத்த நாளங்களை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் நாம் அருந்த வேண்டிய ஐந்து வகை சாறுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட் அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும், நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.
க்ரான்பெரி ஜூஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களை பலப்படுத்தவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.
ப்ளூபெரி ஜூஸில் நிறைந்துள்ள வைட்டமின் C மற்றும் அந்தோசியானின்ஸ் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிந்து நரம்புகளின் சுவர்களை வலுவடையச் செய்கின்றன.
கேரட் ஜூஸில் நிறைந்துள்ள வைட்டமின் E மற்றும் பீட்டா கரோடீன் சத்துக்கள் இரத்த நாளங்களை ஆரோக்கியமாய் வைக்கவும் வெரிகோஸ் (Varicose) நோய் வரும் அபாயத்தைத் தடுக்கவும் உதவுகின்றன.
ஆரஞ்சு, கிரேப், லெமன் போன்ற சிட்ரஸ் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸ்களில் வைட்டமின் C மற்றும் பிளவனாய்ட்கள் அதிகம் உள்ளன. இவை நரம்புகளின் நீட்சித் தன்மையை அதிகரிக்கச் செய்து இரத்த உறைவைத் தடுக்க உதவி புரிகின்றன.
மேலே கூறிய இந்த ஐந்து வகை ஜூஸ்களை அடிக்கடி அருந்தி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாய் நிற்போம்.