
காலையில் எழுந்ததும் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள ஒரு சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதும் ஜம்முன்னு வாழலாம். அது என்னவென்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. அலைபேசியை தவிருங்கள்.
காலையில் எழுந்ததும் அலைப்பேசியை பார்க்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. அவ்வாறு அலைப்பேசியை பார்ப்பது மனதை திசைத்திருப்பி, மனஅழுத்தத்தை தரும். எனவே, எழுந்ததும் 30 நிமிடம் அலைப்பேசியை தவிர்க்கவும். அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சை நன்றாக இழுத்து விடுவது சிறந்தது. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போக போக பழகிவிடும்.
2. உலர் திராட்சை நீர்.
காலையில் எழுந்ததும் ஊற வைத்த உலர் திராட்சை நீர் அருந்துவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை, இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இரவு ஊற வைத்த உலர் திராட்சை நீரை பருகிவிட்டு திராட்சையை சாப்பிடவும். இது நம் உடலில் ஆற்றலை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், உடம்பிலே இயற்கையாக இருக்கும் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.
3. மனப்பயிற்சி.
காலையில் அமைதியாக மனதிற்கு பயிற்சி அளிப்பது நல்ல புத்துணர்ச்சியை தரும். எனவே, தியானம், சுவாசப்பயிற்சி, இசை கேட்பது போன்றவற்றிற்கு வெறும் 5 நிமிடம் செலவழித்தால் போது தேவையில்லாத பதற்றம் குறைந்து மனம் ரிலாக்ஷாகும்.
4. சமசீரான காலை உணவு.
காலையில் உண்ணும் உணவில் புரதச்சத்து சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். முட்டை, ஓட்ஸ், முழு தானியங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். வாழைப்பழம், பெர்ரி பழங்களை சாப்பிடலாம். காலையில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அது செரிமானத்தை மெதுவாக்கி மந்த நிலையை தரும்.
5. உடற்பயிற்சி.
காலையில் உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுவதும் உடலும், மனதும் சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உடலுக்கு அசைவுக் கொடுக்கும் எளிய உடற்பயிற்சி செய்யலாம். காலையில் எளிய யோகாசன பயிற்சி செய்யலாம். சூரிய நமஸ்காரம் செய்வது மனதிற்கு இதமளித்து, முதுகெலும்பை வலுவாக்கும். இந்த 5 விஷயத்தையும் காலையிலே ட்ரை பண்ணி ஜம்முன்னு வாழுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)