கோடையில் தர்பூசணியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் பெரிய ஆபத்து.. உடனே தெரிஞ்சுக்கோங்க!

watermelon
watermelon
Updated on

சித்திரை மாத சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி ஒரு மாபெரும் வரப்பிரசாதம் ஆகும். இதில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால் உடலின் தாகத்தை உடனடியாக தீர்த்து புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் இந்த தர்பூசணியை சாப்பிடும் போது நாம் செய்யும் சில சின்னச் சின்ன தவறுகள் நமது செரிமான மண்டலத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. 

சில குறிப்பிட்ட உணவுகளுடன் தர்பூசணியை சேர்த்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். அப்படி தர்பூசணியுடன் நாம் எக்காரணத்தைக் கொண்டும் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள்!

தர்பூசணி சாப்பிட்ட உடனே பாலோ அல்லது பால் சம்பந்தப்பட்ட பொருட்களையோ குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஆயுர்வேத முறைப்படி தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் லேசான சிட்ரிக் தன்மை உள்ளது. 

இது பாலுடன் சேரும் போது வயிறு உப்பசம் மற்றும் நெஞ்செரிச்சலை உடனடியாக உருவாக்கிவிடும். மேலும் பாலில் உள்ள புரதமும் தர்பூசணியின் தன்மையும் முற்றிலும் முரண்பட்டவை என்பதால் இது வயிற்றில் தேவையற்ற வாயு தொல்லையை ஏற்படுத்தும்.

தண்ணீர்!

பலருக்கும் எந்த பழங்களை சாப்பிட்டாலும் உடனே தண்ணீர் குடிக்கும் ஒரு பழக்கம் இருக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு இந்த தவறை நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாது. ஏற்கனவே தர்பூசணியில் அதிகப்படியான நீர்ச்சத்து உள்ளது. அதை சாப்பிட்ட உடனே மீண்டும் தண்ணீர் குடித்தால், அது நமது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை நீர்த்துப் போக செய்துவிடும். 

இதையும் படியுங்கள்:
செரிமானம் தரும் பிரண்டைப் பொடியும், இஞ்சி புளி தொக்கும்!
watermelon

இதனால் செரிமானம் மிகவும் தாமதமாகி வயிற்றில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். குறைந்தது முப்பது நிமிடங்களாவது கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மாமிசம் மற்றும் அதிக புரத உணவுகள்!

மதிய உணவாக பிரியாணி அல்லது இறைச்சி சாப்பிட்ட உடனே டெசர்ட் போல தர்பூசணியை சாப்பிடும் வழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது செரிமான மண்டலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். 

ஆனால் தர்பூசணி மிக வேகமாக செரிமானமாகிவிடும். இந்த இரண்டு உணவுகளும் ஒரே நேரத்தில் வயிற்றில் சேரும் போது செரிமான சுழற்சி முற்றிலும் குழம்பிப் போய், உணவு வயிற்றில் தேங்கி புளித்துப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.

இதையும் படியுங்கள்:
Summer Super Food - மகத்தான மஞ்சள் தர்பூசணிப் பழம் - தேடிப் பிடித்து வாங்குவோமா?
watermelon

தர்பூசணிப் பழம் எப்போதுமே தனியாக சாப்பிட வேண்டிய ஒரு பழம். இதை மற்ற எந்த ஒரு உணவோடும் அல்லது பானத்தோடும் கலந்து சாப்பிடக்கூடாது. காலையில் வெறும் வயிற்றில், இரண்டு உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் தர்பூசணியை சாப்பிடுவது தான் மிக சரியான முறையாகும். 

இந்த சிம்பிளான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு தர்பூசணியை சாப்பிட்டால் எந்த ஒரு உபாதையும் இல்லாமல் இந்த கோடைக்காலத்தை மிகவும் ஆரோக்கியமாக நீங்கள் கொண்டாடலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com