இந்த 5 உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் மேல் மாடி சீக்கிரம் காலி! 

hair loss
Foods can lead to hair loss.
Updated on

இன்றைய காலத்தில் முடி உதிர்வு என்பது பலருக்கு ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சினையாக மாறிவிட்டது. இது மரபணு, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். நாம் உண்ணும் உணவுகள் நமது முடி ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சில உணவுகள் அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும், மற்றவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். இந்தப் பதிவில் எதுபோன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டால் முடி உதிர்வு ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம். 

முடி உதிர்வுக்கு வழிவகுக்கும் சில உணவுகள்: 

  1. அதிக சக்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். இது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுத்து, அதிக முடி உதிர்தலுக்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. 

  2. எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகள் தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் தடுக்கின்றன. இது தலைமுடி வறட்சி மற்றும் உடைவுக்கு வழிவகுக்கும். 

  3. மைதா மாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற உணவுகளில் நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். இது முடி உதிர்வு மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். 

  4. நீங்கள் போதிய அளவு புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் போனால், அது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். புரதம் முடியின் முக்கிய கட்டுமானப் பொருளாகும். போதுமான புரதம் இல்லாத உணவுகளை அதிகமாக உட்கொள்வது முடியை வலுவிழக்கச்செய்து அதிகமாக உதிர்வதற்கு காரணமாக அமையும். 

  5. விட்டமின் ஏ, சி, டி, இ மற்றும் பி போன்ற விட்டமின்களும், துத்தநாகம் இரும்பு மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் முடி ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. இந்த ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உட்கொள்வது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
லெக்டின் சத்து  நிறைந்த உணவு மற்றும் பழங்களை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும் தெரியுமா?
hair loss

எனவே, இதைப் புரிந்துகொண்டு, மேலே குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். போதுமானவரை உங்கள் உணவில் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகள், முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியம். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். 

இத்துடன் நல்ல கொழுப்புள்ள நட்ஸ் மற்றும் விதைகள், மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதுபோன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலமாக, முடி உதிர்வைத் தடுத்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். 

logo
Kalki Online
kalkionline.com