கீரையை விட இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள்! 

Foods that contain more iron than spinach!
Foods that contain more iron than spinach!
Published on

நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட இரும்புச்சத்து அவசியம். சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து பற்றாக்குறை ரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். கீரை இரும்புச்சத்து நிறைந்த உணவுதான் என்றாலும் அதைவிட அதிக இரும்புச்சத்து உள்ள வேறு பல உணவுகளும் உள்ளன. இந்தப் பதிவில் கீரையை விட அதிக இரும்புச் சத்துக் கொண்ட சில உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.‌ 

பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். 100 கிராம் பருப்பு வகைகளில் 8.8 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி இரும்புச்சத்து அளவில் 49 சதவீதம் ஆகும். எனவே பருப்பு வகைகளில் காராமணி, துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றை உங்களது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலை கீரையை விட அதிக இரும்பு சத்து நிறைந்த ஒரு சுவையான பருப்பு வகை. 100 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலையில் 6.6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது நமது தினசரி இரும்புச் சத்து தேவையின் 37 சதவீதமாகும். 

நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், வால்நட், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதிகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே உங்களது தினசரி உணவில் சிறிய அளவு நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் கொழுப்புச் சத்துக்களும் அதிகம் இருப்பதால் மிதமாகவே சாப்பிட வேண்டும். 

உலர் பழங்கள்: உலர் திராட்சை பேரீட்சை மற்றும் அத்திப்பழம் போன்ற உலர் பழங்கள் இரும்புச் சத்தின் சிறந்த மூலமாகவும். இவற்றையும் உங்களது தினசரி இரும்பு சத்து தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
தோட்டம் அமைக்க இடம் இல்லையா? தொட்டியே போதும் காய்கறி செடிகளை வளர்க்க!
Foods that contain more iron than spinach!

காய்கறிகள்: பீட்ரூட், ப்ரோக்கோலி போன்ற பல காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக பச்சை இலை காய்கறிகளில் அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் கீரைகளுக்கு பதிலாக நீங்கள் இவற்றை சாப்பிட்டும் உங்களுக்கான இரும்புச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டு இரும்புச்சத்தை அதிகம் பெற்றாலும், உங்கள் உடல் இரும்புச்சத்து எவ்வளவு சிறப்பாக உறிஞ்சுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இரும்புச்சத்து உறிஞ்சிதலை அதிகரிக்க விட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். அதே நேரம் காபி, தேநீர் போன்றவற்றை தவிர்க்கவும். ஏனெனில், அதில் உள்ள சில சேர்மங்கள் இரும்புச்சத்து உறிஞ்சிதலை தடுக்கலாம். 

தினசரி ஒரு சீரான உணவை உண்ணுங்கள். பல்வேறு வகையான இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது, உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com