சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள் & செய்முறை!

Kidney stones
Kidney stones
Published on

சிறுநீரக கற்களை முறையான உணவு பழக்கத்தின் மூலமே சரி செய்து விட முடியும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்ற பல காரணங்கள் உண்டு. சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும், போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் சிறுநீரில் கால்சியம் அதிகம் சேர்ந்து விடும். இவைதான் கற்களாக உருமாறுகிறது.

  • சிறுநீரில் யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும் உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், புரோட்டின் அதிகம் உள்ள உணவுகள், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். 

  • உணவு முறைகளில் இவைகளை ஓரளவு சரி செய்யலாம். கற்களின் அளவு ஐந்து மில்லி மீட்டருக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு வைத்தியம் சரிபடும். 

  • கற்களை பெரிதாகாமல் இருக்க செய்வதில் பழச்சாறுகளும், சீமை காட்டு முள்ளங்கி, துளசி போன்ற மூலிகைச் சாறுகளும் பெரும் உதவி செய்கின்றன.

  • மாதுளம் பழம், திராட்சை ,வெள்ளரிக்காய் போன்றவற்றை விதைகளுடன் சேர்த்து சாப்பிடுவதும் ஜூஸாக பருகுவதும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும்.

  • வாழை மரத்தை வெட்டி அதன் அடிமரத்திலிருந்து எடுக்கப்படும் சாறு சிறுநீரகக் கற்களை எளிதாக கரைக்கும் தன்மை கொண்டது. அத்துடன் எளிதில் கிடைக்கும் வாழைத்தண்டைக் கொண்டு ஜூஸ் தயாரித்து பருக சிறுநீரக கற்கள் காணாமல் போய்விடும்.

  • தக்காளிப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, பார்லி தண்ணீர்-பார்லியை நன்றாக வேக வைத்து அதன் நீரை மட்டும் வடித்து பருக அதிக சிறுநீர் வெளியேறும் இதனால் சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.

  • கீரைகளில் அகத்திக் கீரையும் , புதினாவும் சமையலில் உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.

  • சிறுநீரை பெருக்கும் பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற நீர்க் காய்களை உணவில் சேர்த்துக் கொள்வதும், முள்ளங்கி சாறில் மிளகுத்தூள் உப்பு சேர்த்து பருகுவதும் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
மனித உடலில் எத்தனை வகையான சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன தெரியுமா?
Kidney stones

வாழைத்தண்டு ஜூஸ்:

தேவையானவை:

  • வாழைத்தண்டு ஒன்று 

  • இஞ்சி ஒரு துண்டு 

  • சீரகம் அரை ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் 2

  • உப்பு சிறிது 

  • மோர் (அ) எலுமிச்சை சாறு

செய்முறை:

வாழைத்தண்டை எடுத்து பட்டையை உரித்து சின்ன துண்டுகளாக நறுக்கவும். அத்துடன் உப்பு, சீரகம், இஞ்சி துண்டு, சின்ன வெங்காயம் போட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி சாறெடுத்து அதில் ஒரு கரண்டி மோர் அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறிவிடும். வாழைத்தண்டு சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை போக்குவதுடன் உடல் பருமன் குறையவும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com