குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

Foods that help boost winter immunity
Foods that help boost winter immunity
Published on

குளிர் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்பநிலை, உடலுக்கு வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. இதனால் நமது உடலின் வளர்சிதை மாற்றம், உணவு தேர்வுகள் மற்றும் பசி என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

குளிர்காலத்தில் வளர்சிதை மாற்றம் வேகமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அதிக பசி மற்றும் குளிர் தாங்கும் உணவுகளுடன்  தொடர்புடையதாக குறிப்பிடுகிறது. இதன் காரணமாகவே குளிர்காலத்தில் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் உதவும் நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவுகள் நமக்குத் தேவை. அதில் சிலவற்றை இப்பதிவில் காண்போம்.

சூப்கள்: குளிர் காலத்தில் பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் சூடான சூப் பாரம்பரியமான உணவாகிறது. சில மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களுடன் இறைச்சி மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சூப்பில் உள்ள நார்ச்சத்து  உடல் வெப்பத்தை சீராக்குகிறது.

வேர் காய்கறிகள்: வேர் காய்கறிகள் அதிக கலோரிகள் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆற்றலை மூலமாகக் கொண்டது. உதாரணமாக, உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

தானியங்கள்: குளிர்காலத்தில் உடலின் இயக்கம் குறைவாக இருப்பதால் தானியங்கள் மற்றும் முழு தானியங்கள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகி உடல் நலனைக் காக்கிறது.

கொட்டைகள் மற்றும் விதைகள்: உலர் உணவுகளான பாதாம், அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், எள் விதைகள் போன்றவை கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்கள். சமச்சீர் கலோரிகளுக்கு சாப்பிட சிறந்தவையாகும்.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிரம்பிய அனைத்தும் குளிர்காலத்தில் காய்ச்சலைத் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

நெய்: நெய்யில் ஒமேகா 3, வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாரம்பரியமாக நெய் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் குளிர் காலத்தில் ஆற்றலைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?
Foods that help boost winter immunity

வெல்லம்: வெல்லத்தில்  நுண்ணூட்டச் சத்துக்கள் நிரம்பியுள்ளதால் சர்க்கரைக்குப் பதிலாக அதை அதிகம் பயன்படுத்தி இனிப்பு சுவையுடன் ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறலாம்.

மசாலா மற்றும் மூலிகை தேநீர்: புதிய மஞ்சள், இஞ்சி, புதினா, மிளகுத்தூள், இலவங்கப்பட்டை ஆகியவற்றிலிருந்து மூலிகை தேநீர் தயாரிந்து அருந்தலாம். இது வெப்பத்தை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவும் அல்லது காபியில் சிட்டிகை அல்லது உணவில் சேர்ப்பது வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும்.

வைட்டமின் டி உணவுகள்: குளிர் காலத்தில் சூரிய ஒளி மற்றும் சூரியனின் வெளிப்பாடு குறைவாக உள்ளதால் அதிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். இதைத் தவிர்க்க முட்டை, சால்மன் மீன், பால், தயிர், காளான்கள், ஆரஞ்சு மற்றும் பால் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகள் குளிர்கால உணவுகளில் நிச்சயம் இடம் பெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com