உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்!

metabolism rich foods
metabolism rich foods

மெட்டபாலிசம் என்பது நமது உடலில் உல்ள கொழுப்புகளைக் குறைத்து எடையை பராமரிக்கும் ஒன்று. சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகவே மாட்டார்கள். அதற்கு காரணம் இயற்கையாகவே அவரது உடலில் மெட்டபாலிசம் அதிகம் உள்ளதுதான். அதேபோல் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யும்போது அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்படும். நீங்கள் உங்கள் உடல் பருமனை குறைக்க வேண்டுமென்றாலும் சீராகப் பராமரிக்க வேண்டுமென்றாலும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

அவகேடோ:

அவகேடோவில் கொழுப்புகளைக் கரைக்க உதவும் அதிகப்படியான பாலி மற்றும் மொனோ கரைப்புகள் உள்ளன.

மதிய உணவுடன் சேர்த்து அவகேடோ எடுத்துக்கொண்டால் அதிகமானப் பசியை போக்கக்கூடியதாகவும் வெகு நேரம் பசிக்காமலும் இருக்கும். மேலும் அன்றாடம் எடுத்துக்கொண்டால் கொழுப்புகள் கரையும்.

புரத சத்துக்கள்:

மெட்டபாலிசத்தை அதிகரிக்க சிறந்த உணவுவகைகள் புரதச் சத்துள்ள உணவு வகைகள். மாமிசம், மீன், முட்டையின் வெள்ளை கரு, பாதாம் அல்லது எந்த வகையான பருப்புவகைகளும் எடுத்துக்கொள்ளலாம். இதில் எதாவது ஒன்று தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாமிசம் மற்றும் மீன் வாரத்திற்கு இரண்டுமுறை எடுத்துக்கொள்வது நல்லது.

மிளகாய்த்தூள்:

அன்றாட உணவில் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது உங்கள் உடம்பில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளைக் கரைக்க உதவும்.

டெம்பே:

இது நொதிக்கவைக்கப்பட்ட சோயா பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படுவது. இதில் அதிகப்படியான புரத சத்துகள் உள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

தானியங்கள்:

தானிய வகைகளில் அதிகப்படியான நார் சத்துக்கள் உள்ளதால் இது மெட்டபாலிசம் அதிகரிக்க உதவும். இதனை நீங்கள் நன்றாக ஊரவைத்து காலை மற்றும் மாலை வேளைகளில் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கும் வேலைக்குச் செல்பவர்களுக்கும் இடைவேளை நேரத்தில் சாப்பிடுவதற்கான தின்பண்டங்களுக்கு பதிலாக தானிய வகைகள் வைத்துக் கொடுக்கலாம்.

க்ரீன் டீ:

க்ரீன் டீயில் கொழுப்பைக் கரைக்கும் பயோ ஆக்டிவ் உள்ளதால் எடையை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதனையும் காலை மற்றும் மாலை வேளைகளில் பருகலாம்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்:

பருப்பு வகைகளில் அதிகப்படியான நீர் சத்துக்கள் உள்ளன. மேலும் இது குடலில் இருக்கும் நம் உடலுக்கு நன்மைப் பயக்கும் பேக்டிரியாவிற்கு உணவாக மாறும். மேலும் பீன்ஸிலும் அதிக புரதச்சத்துக்கள் உள்ளன. ஆகையால் இந்த இரண்டையும் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம்.

இதையும் படியுங்கள்:
ஆவாரை பூத்திருக்க; நோவாரை கண்டதுண்டோ?
metabolism rich foods

இந்த உணவு வகைகள் போக தினமும் நாம் செய்ய வேண்டியவை:

  1. தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அதற்கேற்றவாரு காலை அல்லது மாலை வேளைகளில் உடல் பயிற்சி செய்யலாம்.

  2. சுடு நீர் மற்றும் ஃப்ரிட்ஜில் வைத்த நீரை குடிக்கக்கூடாது. சாதாரண நீரைப் பருகுவதே நல்லது. இது உடல் வெப்பத்தை குறைக்கவும் உதவும்.

  3. இரவில் நன்றாக உறங்க வேண்டும். தூக்கத்தைத் தவிர்ப்பது உடல் மெட்டாபாலிசத்தை குறைக்கச் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com