பெண்கள் தினசரி கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்! 

Foods that women must eat daily!
Foods that women must eat daily!

பெண்கள் தங்கள் வாழ்நாளில் பல்வேறு விதமான உடல் நல மாற்றங்களை சந்திக்கிறார்கள். இதனால் ஹார்மோன் சமநிலை, கர்ப்பம், மாதவிடாய் போன்ற காலகட்டங்களில் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன. சரியான உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் பெண்கள் தங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களைத் தடுக்கவும், வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக மாற்றிக் கொள்ளவும் முடியும். 

இப்பதிவில் பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவுகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதய நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுன்றன.

முழு தானியங்கள்: முழு தானியங்கள் நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. இவை ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை மேலாண்மைக்கும் உதவும். 

கொழுப்புள்ள மீன்: கொழுப்புள்ள மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். இவை இதய ஆரோகத்திற்கும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 

பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தாவர அடிப்படையிலான புரதத்திற்கு சிறந்த ஆதாரமாகும். இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்ததாகும். 

பால் பொருட்கள்: பால் பொருட்களில் கால்சியம் விட்டமின் டி மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அது பெண்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கும், பற்களை வலுப்படுத்தவும், தசைகளை வளர்க்கவும் உதவும். 

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு ஜில்லுன்னு கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸ் செய்யலாம் வாங்க!
Foods that women must eat daily!

நட்ஸ் மற்றும் விதைகள்: நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இவை பெண்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை சிறப்பாக மாற்றவும் உதவும். எனவே தினசரி ஒரு கைப்பிடி அளவு விதைகள் சாப்பிடுவது நல்லது. 

மேலே குறிப்பிட்ட உணவுகளை அனைவருமே சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், குறிப்பாக பெண்கள் சாப்பிடுவது அவர்களது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எனவே ஒவ்வொரு நாளும் இந்த உணவுகளை பெண்கள் உணவாக உட்கொள்வது அவர்களுக்கு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com