Broccoli Cauliflower
Broccoli Cauliflowerhttps://www.asweetpeachef.com

நல்ல செரிமானத்துக்கும் ஆழ்ந்த தூக்கத்துக்கும் இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Published on

சில வகை  காய்கறிகள் ஊட்டச் சத்துக்கள் நிறைந்ததாக இருந்தபோதும் அவற்றை இரவு உணவுடன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதாக இருக்காது. ஆகையால், அவற்றை இரவு உணவில் தவிர்த்து விடுவது நல்லது. அவ்வாறு தவிர்க்க வேண்டிய காய்கறிகள் எவை என்றும், அவற்றை இரவில் உட்கொண்டால் உண்டாகும் தீமைகள் என்னவென்றும் இந்தப் பதிவில் காண்போம்.

புரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்களை இரவில் தவிர்ப்பது நலம். ஏனெனில் இவை வயிற்றுக்குள் வீக்கம் மற்றும் வாய்வு உற்பத்தியை உண்டுபண்ணக்கூடும்.

ஜீரணமாவதற்கு கடினமாகவும், அசௌகரியங்களை உண்டுபண்ணக் கூடியதுமான பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் இரவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.

பச்சை வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை இரவில் தவிர்ப்பது நன்மை தரும். ஏனெனில் அவை அஜீரணத்தை உண்டுபண்ணுவதுடன் தூக்கத்தையும் கெடுக்கக் கூடியதாக அமையும்.

ஜலப்பீனா மற்றும் சில்லீஸ் போன்ற ஸ்பைசி பெப்பர்ஸ் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. ஏனெனில், அவை வயிற்றுக்குள்ளிருக்கும் அமிலத்தை உணவுக் குழாய்க்குள் புகச் செய்யும். மேலும், நெஞ்செரிச்சலையும் உண்டுபண்ணும்.

அதிகமான நார்ச்சத்து உள்ள முட்டைக்கோஸ் மற்றும் பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற காய்கள் வாய்வு உற்பத்தி பண்ணக்கூடியவை. ஆகையால், இவற்றை இரவு உணவில் தவிர்ப்பது நன்மை தரும்.

இதையும் படியுங்கள்:
தெற்கு ஆசியாவின் மிக உயரமான மாத்தூர் தொட்டிப் பாலம்!
Broccoli Cauliflower

தக்காளியிலுள்ள அமிலங்களானது நெஞ்செரிச்சலைத் தரவும், வயிற்று அமிலம் உணவுக்  குழாய்க்குள் புகவும் (Acid reflux) உதவி செய்யும். எனவே, இரவு உணவுடன் தக்காளியை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்வது நலம்.

காளான் உணவை இரவில் அதிகளவு உட்கொள்வது வயிற்றுக்குள் பாரமான உணர்வைத் தந்து அசௌகரியம் உண்டாக்கும். இதையும்  குறைந்த அளவில் எடுத்துக்கொண்டால் நன்மை தரும்.

வெள்ளரி, செலரி போன்ற அதிகளவு நீர்ச்சத்துள்ள காய்களை இரவில் உண்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போக வாய்ப்பு உண்டாகும். எனவே,  இவற்றையும் இரவில் உண்பதை தவிர்த்து விடுவது நலமாகும்.

logo
Kalki Online
kalkionline.com