சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளாஸ்மா, பிளேட்லெட்ஸ் போன்ற முக்கிய பொருட்களின் கூட்டமைப்பில் உருவாவதே நம் உடலில் ஓடும் இரத்தம். அவை ஒவ்வொன்றும் உடலின் இயக்கத்திற்குத் தேவையான ஒவ்வொரு செயலை செய்து வருகின்றன.
வெள்ளை அணுக்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது திசுக்கள் மற்றும் இரத்த ஓட்டத்துடன் இணைந்து உடலெங்கும் சென்று காயங்களை ஆற்றவும், நோய்களைக் குணப்படுத்தவும், தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் செய்யும். இந்த வெள்ளை அணுக்களின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
வைட்டமின் C அதிகம் உள்ள சிட்ரஸ் பழம், ரெட் பெல் பெப்பர். இதில் உள்ள கரோடீன் என்ற சத்து மொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவி புரியும்.
அதிகளவு வைட்டமின்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்தது பசலைக் கீரை. இதிலுள்ள ஃபொலேட், புதிய வெள்ளை அணுக்களையும், DNA வையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. DNA வில் உள்ள குறைகளை சரி செய்யவும் உதவும்.
புரோக்கோலியில் வைட்டமின் C, A, E, நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கும், வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கும் உதவுகின்றன.
சிக்கனில் உள்ள தரமான புரோட்டீன் மற்றும் வைட்டமின் B6 ஆகியவை இரத்தத்தில் புதிய வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக் கூடியவை.
பாதாம் பருப்புகளில் உள்ள அதிகளவு வைட்டமின் E சத்தானது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வெள்ளை அணுக்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவும்.
பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் குணம் கொண்டது. இதிலுள்ள அல்லிசின் என்ற பொருள் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் செய்யும்.
ஆரஞ்சு, லெமன், கிரேப் மற்றும் லைம் போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இது வெள்ளை அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் புகுவதைத் தடுத்து நிறுத்தவும் உதவுகிறது.
மேற்கூறிய உணவுகளை நாமும் அடிக்கடி உட்கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து உடல் நலம் காப்போம்.