கோடையில் கண்களைப் பாதுகாக்க உண்ண வேண்டிய உணவுகள்!

Foods to Eat to Protect Eyes in Summer
Foods to Eat to Protect Eyes in Summerhttps://tamil.webdunia.com

ன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கணினிக்கு முன்பு அமர்ந்து, எங்கும் நகராமல், பல மணி நேரம் பணி செய்கின்றனர். இதன் விளைவு, இன்று பலரும் கண்ணாடிகளை சர்வ சாதாரணமாக அணியத் தொடங்கிவிட்டனர். ஆறு வயது முதல் அறுபது வயது வரை, நாம் கண்ணாடி அணிந்திருக்கும் நபர்களை எளிதாகக் காண முடிகிறது. கோடைக்காலத்தில் உடல் சூடு காரணமாக கண் எரிச்சல் போன்ற பல கண் பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். இவற்றைத் தவிர்க்க சில உணவுகளை முன்கூட்டியே எடுத்துக்கொண்டால், அப்பிரச்னையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

கண் ஆரோக்கியத்துக்கும், நாம் உண்ணும் உணவுக்கும் நேரடி தொடர்பு உள்ளன. இந்த உணவுப்பட்டியல் நீளம் என்றாலும் கண்களுக்கு நலன் தரும், சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

கண்களுக்குத் தேவையான மிக முக்கிய சத்துக்கள் என்றால், வைட்டமின் E, A, C போன்றவையாகும். சூரியகாந்தி எண்ணெய், பாதாம், நல்லெண்ணெய், பப்பாளி போன்றவற்றில் இந்த வைட்டமின் E அதிகமாக உள்ளது.

பப்பாளி: கண் புரையை வளர விடாமல் தடுக்க உதவுவது இந்த வைட்டமின் E சத்துக்கள்தான். பாதாமில் வைட்டமின் E அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து, கண் புரை பிரச்னையின் தீவிரத்தை குறைக்கிறது.

வைட்டமின் A சத்துக்கள் இருந்தால்தான், இரவு நேரத்திலும் பார்வை கூர்மையாக தெரியும். அந்த வகையில், கேரட், தக்காளி, தர்பூசணி, ஸ்வீட் உருளைக்கிழங்கு, கீரைகள், புரோக்கோலி போன்றவற்றில் வைட்டமின் A நிறைந்துள்ளது. அதிலும் புரோக்கோலியை அரை கப் சாப்பிட்டாலே, உடலுக்கு சுமார் 60 மைக்ரோ கிராம் வைட்டமின் A கிடைக்கிறதாம்.

பச்சை கேரட்: கேரட்டில் வைட்டமின் A சத்து அதிகமாகவே உள்ளது. இந்த கேரட்டில் பீட்டா கரோட்டினும், லூடீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் நிறைந்துள்ளதால், விழித்திரை உள்ளிட்ட கண் பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கேரட் தருகிறது. அத்துடன், மாகுலர் சிதைவுக்கான ஆபத்தையும் குறைக்கிறது. கண்ணில் இருக்கும் கார்னியாவுக்கு, மிக முக்கிய தேவையே இந்த வைட்டமின் A சத்துக்கள்தான். அரை கப் கேரட்டை, பச்சையாக சாப்பிட்டாலே, 459 மைக்ரோ கிராம் வைட்டமின் A கிடைக்கும்.

கோழி முட்டையிலும் வைட்டமின் A சத்து உள்ளது. அதிலும், முட்டையின் வெள்ளை கருவில் உள்ள புரோட்டீனும், மஞ்சள் கருவில் உள்ள கொலாஜன், கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்களை தடுக்க பேருதவி புரிகிறது.

இரத்த ஓட்டம்: ஆரஞ்சு, எலுமிச்சம் பழங்களில் இந்த சத்துக்கள் அதிகமாகவும், பப்பாளி, கொய்யா, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்றவற்றிலும் இந்த வைட்டமின் C சத்துக்கள் நிறைந்துள்ளன. கண்களின் இரத்த நாளங்களுக்குள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்ய உதவுவது இந்த வைட்டமின் C உணவுகள்தான்.

கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதில் மீன் உணவுக்கு பெரும்பங்கு உண்டு. காரணம், மீன் உணவிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கண்களி்ல் ஏற்படும் மாஸ்குலர் சிதைவை தடுக்க உதவுகிறது. எனவே, ஒமேகா 3 அதிகமுள்ள சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி போன்ற மீன்களை வாரம் இரு முறையாவது சாப்பிட வேண்டும்.

குடைமிளகாய்: கோழிக்கறி, பால், ராஜ்மா, வேர்க்கடலை, பீன்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள் பச்சை இலைக்காய்கறிகள், சர்க்கரை, பட்டாணி, குடைமிளகாய், வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், விழித்திரை பிரச்னை முதல் செல்கள் சேதம் அடையாமல் தடுத்து நிறுத்த உதவுகின்றன.

இதில், சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் A அதிகமாகவே உள்ளது. ஒரே ஒரு முழு சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால், உடலுக்கு 1403 மைக்ரோ கிராம் வைட்டமின் A சத்து கிடைக்கிறதாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் பெற்றோரா நீங்க? ப்ளீஸ், இந்த செட்டிங்ஸ் மாத்தி கொடுங்க! 
Foods to Eat to Protect Eyes in Summer

மஞ்சள் நிற காய்கள்: அதேபோல, B கரோட்டின் சத்துக்களையும் அதிகம் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை தரும். மஞ்சள், ஆரஞ்சு நிற உணவுப் பொருட்களில், இந்த சத்துக்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக, கேரட், பப்பாளி, கேப்ஸிகம், சிவப்பு நிற காய்கறி, மஞ்சள் நிற காய்கறி, மஞ்சள் நிற பழங்களில் இது நிறைந்திருக்கிறது. அந்த வகையில், மாம்பழம், அவகோடாவையும் தவறவிடக் கூடாது.

தேங்காய் பால்: வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு இப்படி ஏதாவது ஒரு காய்கறியை வெட்டி துண்டுகளாக்கி, கண்களின் மீது வைக்கலாம். அல்லது தேங்காய் பால் சிறிது எடுத்து கண்ணின் மேற்புறம் தேய்க்கலாம். வெளிப்புறமாக இவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும், ஆரோக்கியமான உணவும், முறையான தூக்கமும், நிறைய தண்ணீர் குடிப்பதும்தான் கண்களைக் காக்கும்.

உணவு முறையில் இப்படி மாற்றம் கொண்டுவந்தாலே, கண் நலன் பாதுகாக்கப்பட்டுவிடும். அத்துடன், வீட்டில் இதுபோன்ற சில எளிய முறைகளை பயன்படுத்தியும் கண்களின் நலனைக் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com