காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இத தெரிஞ்சுக்கோங்க..!

Don't Eat Tea With Biscuit
Tea with biscuit
Published on

பெரும்பாலான மக்களுக்கு டீ குடிக்கவில்லை என்றால் தலைவலி வந்துவிடும். பல இளைஞர்களின் காலை உணவு, மதிய உணவு டீ தான். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு டீ குடிக்கவில்லை என்றால் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் போய்விடும். மழைக்காலமோ, வெயில் காலமோ எந்த காலமாக இருந்தாலும் டீ எப்போதும் மக்களிடையே பிரபலமாக இருக்க கூடிய ஒன்று.

காலை எழுந்ததும் டீ குடித்தால் தான் மற்ற வேலைகளே நடக்கும் என்ற அளவிற்கு டீ பலரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்தவகையில் டீ குடிக்கும் போது அதனுடன் பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் நாம் டீயுடன் சில உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

நாம் டீயுடன் சாப்பிடக் கூடாத உணவுப்பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

டீயுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

ஒரு சிலர் காலையில் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளும்போது நிச்சயம் டீ குடிக்க கூடாது. நீங்கள் பழங்களுடன் டீ குடிக்க வேண்டும் என நினைத்தால் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீ மற்றும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 

பெரும்பாலான மனிதர்கள் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவார்கள். இதை பலரும் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், பிஸ்கட் இனிப்பு மற்றும் மாவினால் தயாரிக்கப்படுவதால் டீயுடன்  சேர்த்து உண்ணும் போது மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். 

டீ பாலில் தயார் செய்யப்படுகிறது என்றாலும், பாலில் தயார் செய்யப்பட்ட மோர், தயிர், சீஸ், பன்னீர் போன்ற உணவுப் பொருள்கள் சாப்பிட்டு விட்டு டீ உடனே அருந்தக்கூடாது அல்லது இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

மஞ்சள் கலந்த உணவு பொருட்களை டீயுடன் உட்கொள்ளக்கூடாது. இது செரிமானம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. 

டீயுடன் நட்ஸ் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் டீயில் உள்ள 'டானின்' நட்ஸ் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் இன்சுலின் இலை பற்றி தெரியுமா? 
Don't Eat Tea With Biscuit

காரம் கலந்த உணவுகளை டீயுடன் தவிர்த்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

டீயுடன் இரும்பு சத்து நிறைந்த உணவான கீரை மற்றும் பட்டாணி போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது தேநீரில் உள்ள 'டானின்' இதில் உள்ள சத்துக்களை உறிஞ்சு விடுகிறது. இதனால் எவ்விதமான சத்துக்களும் உடலுக்கு கிடைக்காது. 

எண்ணெயில் பொரித்த உணவுப் பொருள்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுடன் டீ குடிக்கும் போது வயிற்றில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

ஐஸ்கிரீம், குளிர்ந்த பானங்கள் போன்றவற்றை அருந்தி விட்டு டீ குடிக்க கூடாது. இரண்டும் வயிற்றில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com