மது அருந்திய பின் சாப்பிடக்கூடாத உணவுகள்... மீறி சாப்பிட்டால்? 

alcohol
Foods you shouldn't eat after drinking alcohol
Published on

நான் மற்ற பதிவுகளில் சொல்வதைப் போல யாரும் மது அருந்தாதீர்கள் அது உடலுக்கு கெடுதல் என இந்தப் பதிவில் சொல்லப்போவது கிடையாது. என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் வெளியே சென்று மது அருந்துவது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். ஆனால் மது அருந்திய பிறகு சில உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் மது அருந்திய பிறகு ஏன் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். 

மது அருந்திய பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

காரமான உணவுகள்: மது என்பது செரிமான அமைப்பை எரிச்சலூட்டும் மற்றும் வயிற்று அமிலத்தை அதிகரிக்கும். காரமான உணவுகள் இந்த விளைவுகளை மேலும் தீவிரப்படுத்தி வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை புண் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்: கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. மது உங்கள் உடலில் கொழுப்பு உடைபடும் செயல்முறையை மெதுவாக்குகிறது. இதனால் வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

சர்க்கரை நிறைந்த உணவுகள்: மது அருந்திய பிறகு சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துகிறது. இதனால் தலைசுற்றல், சோர்வு மற்றும் மது அருந்தியதால் ஏற்படும் மற்ற பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். 

பால் பொருட்கள்: பால் மற்றும் பால் பொருட்களில் லாக்டோஸ் என்ற இயற்கை சர்க்கரை உள்ளது. மது லாக்டோசை உடைக்கும் என்சைம் உற்பத்தியை தடுக்கக்கூடியது. இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு வயிறு வீக்கம் வயிற்றுப்போக்கு மற்றும் வாயு போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

காஃபின்: காஃபின் ஒரு தூண்டுதல் பொருளாகும். இதன் மூலமாக மதுவினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமாகும். இது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
புகை, மது போன்று தீமை தரும் மேலும் நான்கு விஷயங்கள் எவை தெரியுமா?
alcohol

மது அருந்திய பிறகு என்ன சாப்பிடலாம்? 

மது அருந்திய பிறகு எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக பழங்கள் காய்கறிகள் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்களது செரிமானத்தை ஆதரித்து உங்களை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி மற்றும் கேரட், வெள்ளரிக்காய் போன்ற சாலட்கள் சிறந்த தேர்வாகும். இவை மதுவினால் ஏற்படும் உடல் பாதிப்புகளை குறைக்கக் கூடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com