தொல்லை தரும் தொப்பைக்கு, ‘குட் பை’ சொல்லும் 3 வகை தேநீர்!

தொல்லை தரும் தொப்பைக்கு,
‘குட் பை’ சொல்லும் 3 வகை தேநீர்!

ழகான தோற்றத்துக்கு தொப்பையின்றி இருப்பது அவசியம். அது ஆரோக்கியமும் கூட. தொப்பை பல நோய்களுக்கு வித்திடுகிறது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் நாம் உட்கொள்ளும் உணவுகளிலும் கவனம் வைத்தால்தான் தொப்பையை கரைக்க முடியும். தொப்பையை விரைவில் கரைக்க மூன்று வகையான தேநீர் வகைகள் உள்ளன. அவை: 1. இஞ்சித் தேநீர், 2. எலுமிச்சைத் தேநீர், 3. சப்ஜா விதைத் தேநீர் ஆகியவை ஆகும்.

1. இஞ்சித் தேநீர்: ஒரு துண்டு இஞ்சியை எடுத்து கழுவி, தோல்சீவி அதை மத்தினால் நசுக்கிக் கொள்ளவும். தேநீர் வைக்கும் பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, நசுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விட்ட பிறகு அதனுடன் அரை ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி கால் ஸ்பூன் தேன் கலந்து பருகி வரலாம்.

2. எலுமிச்சைத் தேநீர்: ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் அரை ஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கொதித்ததும், இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து பருகவும்.

3. சப்ஜா விதைத் தேநீர்: திருநீற்று பச்சிலைச் செடியின் விதைகளே சப்ஜா விதைகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளைப் போட்டு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை கொதிக்க வைத்து, வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.

இந்தத் தேநீர் வகைகள் நமது உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து, தொப்பையை வேகமாக குறைக்க உதவிபுரியும். இந்தத் தேநீர் வகைகளில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com