உலகிலேயே ஒல்லியானவர்கள் பிரெஞ்சு மக்கள்! எப்படி சாத்தியம்?

French people's lifestyle
French people
Published on

பிரெஞ்சு மக்கள் மிகவும் ஆரோக்கியமானவர்கள். பிரான்சில் 10 பேர்களில் ஒருவர் தான் உடல் பருமனுடன் இருக்கின்றனர். அதோடு உலகிலேயே மிகவும் குறைந்த இதயநோய் கொண்டவர்களும் அவர்களே. இது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது.

பிரெஞ்சு மக்கள் மிகவும் கொஞ்சமாக சாப்பிடுகின்றனர்; மிகவும் அளவாக சாப்பிடுகின்றனர். அதோடு உணவு உண்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, இரவு உணவை உண்பதற்கு 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் எதுவும் தங்குவதில்லை.

ஒட்டுமொத்தமாக, பிரெஞ்சு மக்கள் சிற்றுண்டி சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவுக்கு இடையில் குறைந்தது நான்கு மணிநேரம் இடைவெளி விடக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பிரான்ஸ் நாட்டு மக்கள் குறைவான அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தளவில் 30.6 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சதவீதம் பிரான்ஸ் நாட்டில் 9.4 ஆக உள்ளது.

ரொட்டி, பீட்சா, பேக்கரிகள் மற்றும் ஒயின் அதிகம் சாப்பிட்டாலும் பிரான்ஸ் நாட்டு மக்கள் ஒல்லியாக காட்சியளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் உணவை வைக்கும் பொருட்களின் அளவு சிறியதாக இருக்குமாம். அதாவது டீ, காபி கோப்பைகள் மிகச் சிறியவையாக இருக்கும். தட்டுகளும் சிறிய அளவில் தான் இருக்கும். இதேபோன்று மற்ற உணவுப் பொருட்களும் சிறிய அளவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தோட்டத்தை கலைக்கூடமாக மாற்றும் 'ட்ரெண்டிங் டெக்னிக்'!
French people's lifestyle

சராசரியாக பிரான்ஸ் மக்கள் 3 வேளை உணவு சாப்பிடுகிறார்கள். அதில் காலை நேர உணவை அவர்கள் பெரும்பாலும் தவிர்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உணவை விரும்பி சாப்பிடும் பிரான்ஸ் மக்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டே உணவை மெதுவாக அசைபோட்டு சாப்பிடுவார்களாம். இது அவர்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. குறைவாக சாப்பிட்டாலும் தரமான பொருட்களை உண்ண வேண்டும் என்பதில் பிரான்ஸ் மக்கள் விடாப்பிடியாக இருப்பார்களாம். பிரான்ஸ் மக்கள் உணவின் போது மது அருந்துவது வழக்கமாக இருக்கும். ஆனால் இனிப்பு, சோடா கொண்ட பானங்கள் பெரும்பாலும் உணவில் இடம் பெறாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதிக கலோரி கொண்ட பானங்களை பிரான்ஸ் மக்கள் தவிர்த்து விடுகிறார்கள்.

பிரெஞ்சு மக்கள் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இது அவர்களின் நீண்ட கால, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது என்கிறார்கள். பிரெஞ்சு மக்களில் சுமார் 65% பேர் வாரத்திற்கு 7 நாட்கள் வேகமாக நடக்கிறார்கள்,

இதன் மூலம் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. தசைகளை இறுக்கமாக வைத்திருக்கிறது. மேலும் அவர்களின் மனதையும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது. பிரெஞ்சு வாழ்க்கை முறை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜப்பானின் கலைப் பொக்கிஷம்: கூரை ஓடு கலைஞரின் உலகப் புகழ்பெற்ற ஹகடா பொம்மைகள்!
French people's lifestyle

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் நீங்கள் நிறைய நடக்க முடியும். பாரிஸில் ஒரு கார் வைத்திருப்பது ஒரு சவால். இதன் விளைவாக, சிலரே உண்மையில் கார்களை வைத்திருக்கிறார்கள், எனவே தெருக்களில் நடப்பதன் மூலமோ அல்லது நகரத்தின் எளிதில் அணுகக்கூடிய பொது போக்குவரத்து அமைப்பைப் பயன்படுத்தி பயணம் செய்வதன் மூலமோ அவர்கள் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது எளிது. கார்கள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நடந்து செல்வதன் மூலமாகவும், பொது போக்குவரத்தை பயன்படுத்தியும் பிரான்ஸ் மக்கள் தங்களது அன்றாட பணிகளை முடிக்கின்றனர்.

இரவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 மணி நேரம் தூங்குகிறனர். அதோடு உறங்கிக் கொண்டிருக்கும் போது தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களை என்ன நடந்தாலும் எழுப்பக் கூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com