பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய பழங்கள்!

Fruits to eat for healthy teeth and gums!
Fruits to eat for healthy teeth and gums!

ரோக்கியத்தில் அக்கறை காட்டும் பலர், தங்கள் உடலை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, வாய் சுகாதாரம் பற்றி பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய் சுகாதாரமே மிகவும் முக்கியம்.

நாம் நம்முடைய வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், உண்ணும் உணவு வழியாக கிருமிகள் உள்ளே நுழைந்து பல பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொருவரும் தங்களின் வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் தங்களின் வாயை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு நாளைக்கு மூன்று வேளை கூட பற்களை துலக்குவார்கள். ஆனால், இப்படி பல் துலக்கினால் மட்டுமே பற்களும் ஈறுகளும் சுத்தமாகிவிடாது. பற்களின் ஆரோக்கியத்திற்கு சில உணவுகளையும் நாம் உட்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக சில பழங்கள் நம் வாய் சுகாதாரத்திற்கு இன்றியமையாத பலன்களை கொடுக்கக் கூடியது. அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

கிவி: கிவி பழம் புளிப்பான சுவையில் இருக்கும். இதிலுள்ள வைட்டமின்களும் தாதுக்களும் வாயின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக, இந்தப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மாங்கனிஸ், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் பீட்டா கரோட்டின் உள்ளதால் ஈறு நோயை சரி செய்யவும் உதவும்.

ஸ்ட்ராபெரி: பற்களில் உருவாகும் பிளேக்குகளைத் தடுக்கும் பண்பு ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ளது. மேலும், இதில் சொத்தை பற்களை ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்லும் அமிலங்கள் உள்ளன. எனவே, ஸ்ட்ராபெரி பழத்தை உட்கொள்வது நமது பற்களின் எனாமலை பாதுகாப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கக்கூடியதாகும்.

இதையும் படியுங்கள்:
பற்கள் முத்து போல் பிரகாசிக்க முக்கியமான யோசனைகள்!
Fruits to eat for healthy teeth and gums!

தர்பூசணி: இந்தப் பழத்தில் லைகோபைன் மற்றும் பொட்டாசியம் போன்ற வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துக்கள் அதிகம் உள்ளன. அத்துடன் இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வாய் வறண்டு போவதைத் தடுத்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. பொதுவாகவே, வாய் வறண்டு போனால்தான் துர்நாற்றம் வீசும். எனவே, வாய் துர்நாற்றம் போக்க விரும்புபவர்கள் தர்பூசணி பழம் சாப்பிடலாம் அல்லது அடிக்கடி அதிகப்படியான நீரையாவது அருந்துங்கள்.

ஆப்பிள்: தினசரி ஒரு ஆப்பிளை நன்றாகக் கடித்து சாப்பிட்டு வந்தால் வாய் சுகாதாரம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆப்பிளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்திருப்பதால் பற்களில் ஏற்படும் எனாமல் சேதத்தை தடுத்து, ஈறுகளை பாதுகாக்கிறது. அத்துடன் ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சத்து பற்கள் சொத்தையாவதைத் தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com