கேன்சர் நோய்க்கு மிகச் சிறந்த தடுப்பு மருந்தாகும் கேக் பழம்!

கேக் பழம்
Gac fruithttps://www.indiamart.com

வியட்நாமை பூர்வீகமாகக் கொண்ட கேக் பழம் (Gac fruit) ஒரு பாரம்பரிய பழமாகும். இது உணவுகளில் வண்ணம் சேர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்பழத்தின் மருத்துவ குணங்களுக்காக இதனை, ‘சொர்க்கத்தின் பழம்’ என்றும் அழைக்கின்றனர். இப்பழமானது தென் சீனாவில் தோன்றி, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வடகிழக்கு ஆஸ்திரேலியா வரை பரவியதாகக் கருதப்படுகிறது.

பழங்கள் முட்டை வடிவில் அல்லது நீள் வட்ட வடிவில் இருக்கும். தோலில் பல சிறிய முட்கள் காணப்படும். இவை ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும் பழுத்து முதிர்ச்சி அடையும் போது ஆழமான ஆரஞ்சு சிவப்பு நிறத்திலும் காணப்படும். பழங்கள், விதைகள் மற்றும் விதை எண்ணையில் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன், ஒமேகா 6, ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளது.

வியட்நாமியர்கள் விரும்பி உண்ணும் இந்தப் பழத்தில் கரோட்டினாய்டு உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதிலுள்ள குறிப்பிட்ட புரதம் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் நரம்பு மண்டல பிரச்னை மற்றும் மனச்சோர்வை எதிர்த்து போராடக்கூடிய செலினியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன. ஆண் பூக்கள் மற்றும் பெண் பூக்கள் என இரண்டு வகையான  கேக் செடிகள் உள்ளன.

கேக் பழம் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த பழமாகும். இது புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடியது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மென்மையான வெண்ணை போன்ற சதை ஆரோக்கியமான கொழுப்புகளில் நிறைந்துள்ளது. இருப்பினும் முக்கிய ஊட்டச்சத்து விதைகளை சுற்றி உள்ள சிவப்பு கூழில் அதிகம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இடையில் அரைஞாண் கயிறு கட்டும் ரகசியம் தெரியுமா?
கேக் பழம்

இதன் வெளிப்புறத் தோலை சாப்பிட முடியாது. உள்பகுதியில் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க அடர்த்தியான கூழ் போன்ற பகுதி உண்பதற்கு ஏற்றது. பழம் ஆரஞ்சு சிவப்பு நிறமாக மாறியதும் உண்பதற்கு ஏற்றது. இதன் பச்சையான காய்கள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

மிட்டாய் மற்றும் ஜாம் செய்ய இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வியட்நாமில் திருமணம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் போன்ற பண்டிகை காலங்களில் வழங்கப்படும் அரிசி உணவான xoi gacக்கு அதன் சிவப்பு நிறத்தை சுவைக்க விதைகளுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய வியட்னாமிய உணவாகும். இதன் விதைகள் ஆயுர்வேதம் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

முதிர்ச்சி அடையாத பச்சை பழம் இந்தியாவில் காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் ‘கேக் கறி’ என்ற பெயரில் முட்கள் உள்ள மேல் தோல் அகற்றப்பட்டு துண்டுகளாக வெட்டப்பட்டு உருளைக்கிழங்கு அல்லது சுரைக்காயுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. தாய்லாந்தில் கேக் பழம் ஐஸ்கிரீமுடன் பரிமாறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com