
பொதுவாக க்ரேன்ஸ்பில் என்று அழைக்கப்படும் ஜெரனியம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இவைகளிலிருந்து சாற்றை எடுத்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. ஜெரனியம் எண்ணெயில் (Geranium oil) பல வேதியியல் கூறுகள் உள்ளன.
மூட்டு வலியை நீக்க
வீங்கிய மூட்டுகள், தலைவலி மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றுக்கு இந்த எண்ணெய் பயன்படுகிறது. 5 சொட்டு எண்ணெயுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஜோஜோபா எண்ணை கலந்து மூட்டில் தடவ வலி குறையும்.
மன அழுத்தம் போக்குதல்
ஜெரனியம் எண்ணெய் மூளைக்கு அமைதி தருகிறது. இதனால் பயம் மன அழுத்தம் நீங்கும். கருவுற்ற பெண்கள் இந்த எண்ணெயை மசாஜ் செய்தால் பிரசவம் பற்றிய பயம் இருக்காது.
நரம்பு சம்பந்தமான நோய்கள்
இந்த எண்ணெய் அழற்சியை போக்கக் கூடியதால் அல்சீமியர் நோய், பார்கின்சன் நோய் மல்டிபிள் ஸ்க்ளீராசிஸ் போன்ற நரம்பு நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் சிட்ரோனெல்லா இருப்பதால் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைக் குறைத்து நோயைக் குறைக்கிறது.
சரும பிரச்னைகள்
இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு இருப்பதால் சரும எரிச்சல் மற்றும் முகப் பருக்களை நீக்குகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரையைக் குறைக்கிறது. ஹைபர் க்ளைசீமியாவையும் குறைக்கிறது.
இந்த எண்ணெயில் நோய் எதிர்பார்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு உள்ளது. இந்த எண்ணெய் இயற்கையில் டையூரிக் தன்மை வாய்ந்ததால் சிறுநீர் போக்கு அதிகரிக்கும். இதனால் உடம்பில் உள்ள நச்சுக்கள் சர்க்கரை, சோடியம் போன்ற கழிவுகள் வெளியேறும். இந்த எண்ணெய் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஷிங்கிள்ல்ஸ் வைரஸ் தொற்று
ஷிங்கிள்ல்ஸ் என்பது நரம்பு இழைகள் மற்றும் நரம்புடன் இணைந்து சருமத்தில் ஏற்படும் வலி. இந்த எண்ணெய்களால் ஆன க்ரீம்கள் பயன்படுத்தும் போது இந்த நரம்பியல் வலி குறையும்.
சுவாச தொற்று
இது கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சைனஸ் தொற்று போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.
பூச்சிக்கடிக்கு மருந்து
பூச்சிக்கடிக்கு இது நல்லது. இதை தடவிக் கொண்டால் பூச்சி கடிக்காது.
கூந்தல் ஆரோக்கியம்
இந்த எண்ணெயை முடிக்கு பயன்படுத்த முடி வளர்ச்சி அதிகரிக்கும்.