Ghee coffee Vs Ghee Tea: காலையில் அருந்த சிறந்தது எது தெரியுமா?

Ghee coffee Vs Ghee Tea
Ghee coffee Vs Ghee TeaImage Credits: Yahoo life UK
Published on

காலை எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருக்கிறது. தற்போது அதில் நெய் சேர்த்துக் கொள்வது என்பது பல நன்மைகளைத் தருவதாகச் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய்யை சேர்த்து அருந்துவது Ghee Tea ஆகும். இது பாரம்பரிய 'திபெத்திய வெண்ணெய் டீ' போடுவது போலவே பின்பற்றப்படுகிறது. டீயில் யாக் வெண்ணெய், சிறிது உப்பு சேர்த்து திபெத்தியர்கள் பாரம்பரிய வெண்ணெய் டீயை தயாரிக்கிறார்கள். இதனால் டீ கிரீமியாகவும், அதிக ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டிருக்கும். இவ்வாறு காலையில் Ghee Tea அருந்துவது இதய சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்யவும், காயங்களை ஆற்றவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

Ghee teaயில் ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நெய்யில் Butyrate இருப்பதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு காம்பவுண்ட் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது.

அது மட்டுமில்லாமல், மாதவிடாய் ஒழுங்கான முறையில் வருவதற்கும் உதவுகிறது. நெய்யில் உள்ள Butyric acid மற்றும் triglycerides கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. உடலில் நல்ல கொழுப்புகள் அதிரிக்க வழிவகுக்கிறது. எலும்பு, தசை போன்ற பகுதிகளுக்கு நெய் ஒரு இயற்கையான உயவுப்பொருளாக செயல்படுகிறது. பிளாக் டீயில் உள்ள Polyphenol காம்பவுண்ட் அழற்சி எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

Ghee Coffee செய்வதற்கு பிளாக் காபியில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் சேர்க்க வேண்டும். இதை காலையில் எடுத்துக்கொள்வதால், மன திருப்தி மற்றும் அறிவாற்றல் மேம்பட உதவுகிறது. Ghee Coffeeயில் உள்ள நன்மைகள் என்னவென்றால், நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு Caffeineஐ மெதுவாக உரிவதால், சீரான சக்தி உடலுக்குக் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
மக்காச்சோளம் Vs ஸ்வீட் கார்ன்: உடலுக்கு ஆரோக்கியம் தருவது எது?
Ghee coffee Vs Ghee Tea

மேலும், நெய்யில் உள்ள Saturated fats கேப்பின்னுடன் இணையும்பொழுது எச்சரிக்கை, ஒருமுகப்படுத்துதல், மனத்தெளிவு ஆகிய உணர்வுகள் கிடைக்கின்றன. நெய்யில் உள்ள Butyric acid குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கிறது. நெய்யில் உள்ள கொழுப்பு உணவு உண்ட முழுதிருப்தியான உணர்வைத் தருவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

Ghee coffee அல்லது Ghee tea எடுத்துக்கொள்வது ஒருவருடைய தேவையைப் பொறுத்து அமைகிறது. காலையில் Ghee coffee எடுத்துக்கொள்வது மனத்தெளிவையும், சக்தியையும் கொடுக்கிறது. மேலும், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதுவே Ghee tea எடுத்துக்கொள்வதன் மூலம், செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com