இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்! நெய்யைப் (Ghee) பயன்படுத்தி, நிம்மதியான உறக்கத்தைப் பெற உதவும் 3 எளிய ரகசியங்களை இப்பதிவில் பார்ப்போம். மன அழுத்தத்தைக் குறைத்து, ஆழமான தூக்கத்தைப் பெற, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த அற்புதப் பொருளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோமா?
நெய்யில் வைட்டமின் A, D, E, K மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் (Butyric Acid) குடல் சுவர்களைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் நெய் சிறந்தது. இது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. மிதமான அளவு நெய் எடுத்துக்கொள்வது, சருமப் பொலிவையும் மேம்படுத்தி, நரம்புகளை அமைதிப்படுத்துவதால் நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
படுக்கும் முன் பாதங்களில் நெய்யால் மசாஜ் செய்யவும்
ஆயுர்வேதத்தில், தூக்கத்தை மேம்படுத்தவும், அதிகப்படியான சிந்தனைகளைக் குறைக்கவும், படுக்கும் முன் பாதங்களில் நெய்யை மென்மையாக மசாஜ் செய்வது ஒரு பாட்டி காலத்து வழக்கமாகும். தேவையற்ற சிந்தனைகளே பெரும்பாலும் நமது தூக்கத்திற்குத் தடையாக இருக்கின்றன.
நெய் பானம் தயாரித்தல்
ஆயுர்வேதத்தில் நெய்யை பயன்படுத்தி பானம் செய்து அருந்தலாம். இது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.
இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டில் பிரச்னை இருந்தால், மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
படுக்கும் முன் இந்த பானம் குடிப்பதால், இரத்தச் சர்க்கரை அளவு சமன்செய்யப்பட்டு, நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது.
நெய் கலந்த தூக்க பானம்
தேவையான பொருட்கள்:
1 கப் பால்
1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை
1 சிட்டிகை ஜாதிக்காய்
1 சிட்டிகை ஏலக்காய்
1-2 டீஸ்பூன் நெய்
1 டீஸ்பூன் தேன் (சுவைக்கேற்ப)
செய்முறை:
1. உங்கள் பொருட்களை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்துச் சில நிமிடங்கள் சூடாக்கவும்.
2. பானம் சற்று நுரைத்தவுடன், நீங்கள் அதை பிளெண்டரில் கலக்கலாம் அல்லது பால் நுரைக்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.
3. படுக்கைக்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன் இந்தத் தூக்க பானத்தைச் சூடாக அருந்தவும். இது உங்களை அமைதியாகவும், தரையிறங்கியதாகவும், தூங்கத் தயாராகவும் உணர வைக்கும்.
படுக்கும் முன் நெய்யால் நெற்றிப்பொட்டுகளிலும் உச்சந்தலையிலும் மசாஜ் செய்யவும்
ஆயுர்வேத முறையில் நிம்மதியான உறக்கத்திற்கு நெய்யால் நெற்றிப்பொட்டுகளிலும் உச்சந்தலையிலும் மசாஜ் செய்வதாகும். தினமும் செய்ய வேண்டியதில்லை, வாரத்துக்கு இரண்டு முறை செய்து பாருங்கள்.
உங்கள் நெற்றிப்பொட்டுகளிலும் உச்சந்தலையிலும் மெதுவாக, வட்ட வடிவ அசைவுகளைச் செய்யுங்கள். இது செரோடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து நல்ல உறக்கம் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)