இஞ்சி, பூண்டு, மிளகு ருசிக்காக மட்டுமல்ல; ஆரோக்கியம் பெறவும்தான்!

இஞ்சி, பூண்டு, மிளகு பேஸ்ட்
இஞ்சி, பூண்டு, மிளகு பேஸ்ட்
Published on

மது வீட்டு சமையலில் மிளகு, இஞ்சி, பூண்டு இல்லாமல் சமையல் இல்லை. அவை உணவிற்கு மனமும், சுவையும் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் காக்கும் அரு மருந்துகளும் கூட. அவற்றின் எளிய மருத்துவ குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.

மிளகையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து நன்கு தூள் செய்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பசி, மந்தம், ஏப்பம், உஷ்ண பேதி முதலியன நிற்கும். மிளகையும், நாயுருவி வேரையும் சமமாக எடுத்து தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, இருமல் நின்று விடும்.

மிளகை நன்றாகப் பொடி செய்து உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்தால் தலைவலி நீங்கும். மளிகைப் பொடி செய்து கஷாயம் வைத்து சாப்பிட்டால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.

வில்வம் பழத்தைப் பாலில் ஊறவைத்து, சிறிது மிளகு தூள் சேர்த்து சாப்பிட மூலம் குணமாகும். சிறிது மிளகையும், கொஞ்சம் வெல்லத்தையும் சேர்த்து உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தால் இருமல், சளி குணமாகும்.

இரண்டு மிளகு, சிறிதளவு தனியா (அரை ஸ்பூன்) தூள் செய்து தேநீர் கொதித்து வரும்போது போட்டு இறக்கி வடிகட்டி சர்க்கரை கலந்து சாப்பிட உடலின் அசதி குறைந்து ஒருவித சுகம் கிடைக்கும்.

நான்கு மிளகு, ஐந்து பல் வெள்ளைப் பூண்டு , கொஞ்சம் தூதுவளை இலை ஆகிய மூன்றையும் அம்மியில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு வந்தால் எந்தக் காரணத்தினாலும் காதில் வலி இருந்தால் அது குணமாகும்.

மிளகு, சந்தனம், சாதிக்காய் இம்மூன்றையும் கூட்டி அரைத்து தடவினால் தீவிரமாக இருக்கும் பருக்கள் மறையும். இதனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் உபயோகிக்க வேண்டும்.

இஞ்சிச் சாற்றுடன் பாலைக் கலந்து உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும். இஞ்சி துவையல் அல்லது பச்சடியில் சாதத்தை கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. வயிற்று வலி போகும். கபத்தினால் ஏற்படும் மார்பு நோய்களும், களைப்பும் தீரும். பல் வலி தீர வேண்டுமானால் தேனில் இஞ்சி சாற்றை கலந்து உட்கொள்ள வேண்டும்.

இஞ்சி லேகியத்தை நாள்தோறும் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் வாந்தி, பித்தம், பசியின்மை போன்றவை சரியாகும். காய்ச்சலில் அடிபட்டு குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் சாப்பிட வாய் கசப்பு மாறிவிடும். இஞ்சி சாற்றை காதில் விட்டால் காது குத்தல் சரியாகும்.

இஞ்சிதான் சுக்காக மாறுகிறது. இஞ்சியை சுண்ணாம்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தினால் அதுவே சுக்கு ஆகிறது. சுக்கைப் பொடி செய்து கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரத்தில் இறக்கவும். இதில் சிறிது பாலும் பனைவெல்லம் கலந்து சாப்பிட உடலில் பலம், தாது விருத்தி, உடலில் அமைதி ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
இஞ்சி, பூண்டு, மிளகு பேஸ்ட்

யானைக்கால் நோய் தொடங்கும்போதே இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து சாப்பிட அந்நோயிலிருந்து விடுபடலாம். சுக்குப் பொடியை சிறிது பூண்டுச் சாற்றில் கலந்து காலையில் உட்கொள்ள சூலை நோய் எனும் இரைப்பை புண் நோய் தீரும்.

தேள் கொட்டி விட்டால், அதன் கொட்டு வாயில் அரைத்த சுக்கு விழுதை தடவி நெருப்பு சூடு காட்டினால் தேள் கடி விஷம் இறங்கி விடும்.

பசு மோர் விட்டு அரைத்த சுக்கை ஒரு ஸ்பூன் அளவு நாள்தோறும் இரண்டு முறை உட்கொண்டால் பேதி நின்று விடும். சுக்குப் பொடியைத் தேனில் குழைத்து உட்கொண்டால் பித்தம், உடல் வலி, தலை சுற்றல், வாந்தி பேதி, உடல் ஒய்ச்சல் போன்றவை சரியாகும்.

ஒரு கப் தண்ணீரில் கருப்பு மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ருசிக்கேற்ப வெல்லம் சேர்த்து இந்தக் கலவையைக் கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, அரை டீஸ்பூன் நெய் சேர்த்து, சூடாக சாப்பிட தொண்டைக்கு ஒரு இனிமையான சுகத்தை அளிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

நெஞ்சு சளி தீர வேண்டுமானால் பூண்டு சாற்றில் சம அளவு இஞ்சி சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com