சோர்வை விரட்டி வலிமை தரும் கோண்ட் கதிரா: முழுமையான வழிகாட்டி!

எலும்புகளை வலுவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புதமான இயற்கை டானிக்!
Gond Katira | கோண்ட் கதிரா
Gond Katira | கோண்ட் கதிராAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கோண்ட் கதிரா (Gond Katira) என்பது டிராககாந்த் கம் (Tragacanth gum) என்று அழைக்கப்படும் ஒரு இயற்கை பிசினாகும். இது அஸ்ட்ராகலஸ் (Astragalus) தாவரத்தின் தண்டுகளில் இருந்து வடியும் சாறு. இது சூரிய ஒளியில் உலர்ந்து படிகங்களாக மாறுகிறது. பார்ப்பதற்கு சிறிய படிகக் கற்கள் போல காணப்படும். இது தண்ணீரில் ஊற வைக்கப்படும்போது தண்ணீரை உறிஞ்சி ஜெல்லி போலப் பல மடங்கு பெரிதாகி மென்மையான பொருளாக மாறுகிறது. இது உடலுக்கு உடனடி குளிர்ச்சியையும் ஆற்றலையும் தரக்கூடிய ஒரு பாரம்பரிய மூலிகைப் பொருளாகும்.

கோண்ட் கதிரா மருத்துவ குணங்கள்:

இயற்கை குளிரூட்டி:

இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், நீரிழப்பு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது.

செரிமானம் மற்றும் ஆரோக்கியம்:

குடலில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, மலச்சிக்கலை தீர்க்கும் நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், குடல் இயக்கத்தை சீராக்குவதற்கும், சிறுநீர் பாதை தொற்றுகளைத் தணிப்பதற்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்:

இதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி:

இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு வலிமை தந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் தாதுக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுவாக்கி மூட்டு வலி மற்றும் முதுகு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

வலி நிவாரணி:

இதன் அழற்சி எதிர்ப்பு (Anti- inflammatory) பண்புகள் மூட்டு வலி மற்றம் தசை வலிகளைக் குறைக்க உதவுகின்றன.

சரும ஆரோக்கியம்:

இது சருமத்திற்குப் பொலிவைத் தருவதுடன், முகத்தில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடவும் உதவுகிறது.

உடல் எடை மேலாண்மை:

இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பிய உணர்வைத் தருவதால், பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

மகப்பேறு பராமரிப்பு:

பிரசவத்திற்குப் பிறகு உடலுக்குத் தேவையான வலிமையையும் ஊட்டச்சத்தையும் மீட்டுத் தர பாரம்பரியமாக இது லட்டுகளாக (Gond laddu) செய்து தரப்படுகிறது. இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. பெண்களுக்குத் தயாரிக்கப்படும் ஆரோக்கிய உணவுகளில் இது முக்கியமாக சேர்க்கப்படுகிறது. அதேபோல் பாரம்பரிய மருத்துவத்தில் இது ஆண்களின் பலவீனத்தை போக்குவதுடன் உடல் பலத்தைப் பெருக்கும் இயற்கை டானிக்காக பயன்படுகிறது.

முக்கிய பயன்பாடுகள்:

இதற்கு தனிப்பட்ட சுவையோ, மணமோ கிடையாது. இதனால் எந்த ஒரு உணவோடும் எளிதாகக் கலந்து உண்ணலாம். இதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு குறைந்தது 5 அல்லது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஜெல்லி போல மாறிய பிறகு நிறமற்ற மற்றும் சுவையற்ற இதனை ரோஸ் சர்பத், எலுமிச்சை சாறு, நன்னாரி ஜூஸ், மில்க் ஷேக் மற்றும் ஃபலூடா போன்ற கோடைக்கால பானங்கள் மற்றும் இனிப்புகளில் கலந்து குடிக்கலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.

சாதாரண லட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் கோண்ட் மற்றும் இந்த கோண்ட் கதிரா இரண்டும் வெவ்வேறானவை. சாதாரண கோண்ட் உடலுக்கு வெப்பத்தைத் தரக்கூடியது; ஆனால் கோண்ட் கதிரா உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.

இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

இரவு தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த பாலில் சிறிதளவு இந்த கோண்ட் கதிரா மற்றும் தேன் கலந்து குடிப்பது நல்ல தூக்கம் மற்றும் உடல் வலிமையை தரக்கூடியது.

தீக்காயங்கள் அல்லது தோலில் ஏற்படும் எரிச்சலை குணமாக்க இதன் ஜெல்லியை பற்று போல சருமத்தில் தடவலாம்.

கோண்ட் கதிராவை உட்கொள்ளும் பொழுது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நார்ச்சத்து மிகுந்த பொருள் குடலில் வறட்சியை ஏற்படுத்தி மலச்சிக்கலைத் தூண்ட வாய்ப்புள்ளது.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com