
1.வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் வயிற்றுப் புண்கள் விலகி விடும்.
2.சளியை வெளியேற்ற, சிறிது ஓமத்தை நீர் விட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருக வேண்டும்.
3. பாகற்காயை நறுக்கி காய வைத்து தூளாக்கிக் கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும்.
4. குரல் கம்மல் இருக்கும்போது தோல் சீவிய இஞ்சியை மென்று அதன் சாற்றை கொஞ்சமாக விழுங்கினால் உடனடியாக பலன் கிடைக்கும்.
5. வேப்பிலைக் கொழுந்தில் வெண்ணைய், மற்றும் மோர் விட்டு அரைத்து, தீப்புண் ஏற்பட்ட இடத்தில் தடவி வர எரிச்சல் அடங்கும் புண் எளிதில் குணமாகும்.
6. கசகாசாவை லேசாக வதக்கி, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறால் ஏற்பட்ட வயிற்றுவலி குணமாகும்.
7. கோதுமை மாவை சலித்தால் வரும் தவிட்டில் தயிரைக்கலந்து உடலில் தேய்த்துக் குளித்தால், வெயிலினால் வரும் எரிச்சல், அரிப்பு விலகி விடும்.
8. கசகசாவை நீரில் ஊறவைத்து பாலில் கலந்து இரவில் தூங்கும் வேளையில் பருகினால் வருவது சுகநித்திரை.
9. பீட்ரூட்டை வேகவைத்த நீரைப் பருகினால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து முடி உதிர்வது குறையும்.
10. ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டு சரியாகும்.
11. வெந்தயத்தை முதல் நாள் இரவு வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் காலை எழுந்தவுடன் தினமும் குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும்.
12. ஒரு டீஸ்பூன் ஓமத்தைப் பொடியாக்கி, துணியில் கட்டி அவ்வப்போது முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு விலகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)