நமது உடலின் இரண்டாவது மூளை எது தெரியுமா?

Gut is the 2nd brain
Organs
Published on

ஒரு ஆரோக்கியமான பெரியவருக்கு (Adult) அவரது குடலில் 1 கிலோ பாக்டீரியா காணப்படும். நமது குடலில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் நமது மன ஆரோக்கியத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சருமம் மற்றும் முடி, நரம்பியல் ஆரோக்கியம், இரைப்பை, குடல் ஆரோக்கியம், மூச்சுக்குழாய் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

நம் உடல் ஆரோக்கியமாக மற்றும் சீராக இருப்பதை உறுதி செய்வதில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான குடல் என்பது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விட நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை குறிக்கிறது. நம் உடலில் உள்ள பல செயல்முறைகளுடன் நேரடியாக குடல் ஆரோக்கியம் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல ஆரோக்கியமான குடல் இதய நோய் ஆபத்தை குறைப்பது, உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பது, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்குவது, மூளை ஆரோக்கியம், நிம்மதியான தூக்கம் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு துணையாக இருக்கும்.

மூளையில் உள்ள நியூரான்களை விட குடல் சுவரில் அதிக நியூரான்கள் இருப்பதால் குடல் இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது. மேலும் சில உள்ளுணர்வுகள் நமது குடலில் இருந்து வருகின்றன.

அதே போல நம்  குடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையே  நெருங்கிய தொடர்பு  உள்ளது. உணர்ச்சிகள் மற்றும் நினைவுகள் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் இடம் நமது குடல். ஏனென்றால் நாம் கவலையாகவோ, பயமாகவோ, பீதியாகவோ, உற்சாகமாகவோ, மகிழ்ச்சியாகவோ அல்லது பதற்றமாகவோ உணரும் போது முதலில் அதை நம் குடலில் தான் உணர்கிறோம். நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டால் மன அழுத்தத்தை தணிக்க முயற்சிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முறுக்கப்பட்ட நரம்பு பாதிப்பும் நிவாரணமும்!
Gut is the 2nd brain

நம் குடலில் 75% செரோடோனின் வெளியிடப்படுகிறது. குடலுக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பிலும், நம் குடலின் சரியான செயல்பாட்டிலும் செரோடோனின் முக்கிய பங்கு வகிக்கிறது.

குடல் பகுதியில் தான் உணவு செரிக்கப்படுகிறது, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, கழிவுகள் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. 

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com