இது மட்டும் தெரிந்தால் நீங்கள் ABC Juice குடிக்கவே மாட்டீங்க! 

ABC Juice
ABC Juice
Published on

சமீபகாலமாக மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பலர் தங்கள் உணவில் பழச்சாறுகளைச் சேர்த்து வருகின்றனர். அவற்றில் குறிப்பாக ஏபிசி ஜூஸ் மிகவும் பிரபலமாகிவிட்டது. ஆப்பிள் (A), பீட்ரூட் (B) மற்றும் கேரட் (C) ஆகிய மூன்று சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ், உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஏபிசி ஜூஸையும் அதிகமாக உட்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில், ஏபிசி ஜூஸைக் குடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

ஏபிசி ஜூஸில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. பீட்ரூட் இரும்பு, நைட்ரேட் மற்றும் பிற வைட்டமின்கள் நிறைந்தது. கேரட் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டின் நிறைந்தது. இந்த மூன்று பொருட்களின் சேர்க்கை, ஏபிசி ஜூஸை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக மாற்றுகிறது.

ஏபிசி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்: 

  1. செரிமானப் பிரச்சினைகள்: பீட்ரூட் மற்றும் கேரட் போன்ற சில காய்கறிகள் சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். வெறும் வயிற்றில் அல்லது அதிக அளவில் ABC ஜூஸை குடிப்பது வாயு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

  2. சிறுநீரக கற்கள்: பீட்ரூட்டில் உள்ள ஆக்ஸாலேட் எனப்படும் பொருள் சிறுநீரகக் கற்கள் உருவாக வழிவகுக்கும். ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் ABC ஜூஸைத் தவிர்க்க வேண்டும்.

  3. ஒவ்வாமை: சிலருக்கு ஆப்பிள், பீட்ரூட் அல்லது கேரட்டுக்கு ஒவ்வாமை இருக்கலாம். இவர்கள் ABC ஜூஸை குடிப்பதால் தோல் அரிப்பு, வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

  4. இரத்தச் சர்க்கரை அளவு: ABC ஜூஸில் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதை மிகவும் கவனமாக உட்கொள்ள வேண்டும்.

  5. மாதவிடாய் பிரச்சினைகள்: சில பெண்களுக்கு ABC ஜூஸ் மாதவிடாய் சுழற்சியை பாதித்து, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் தாமதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

  6. எடையை அதிகரிக்கச் செய்யும்: ABC ஜூஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் குடிப்பது எடையை அதிகரிக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
ABC Juice: தப்பி தவறி கூட இவர்கள் இந்த ஜூஸை குடிக்க கூடாது!
ABC Juice

ABC ஜூஸ் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அதை நம் விருப்பம் போல குடிக்கக்கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையும் வேறுபட்டது என்பதால், ABC ஜூஸை உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், அதிகப்படியான எதையும் உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமநிலையான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் நீண்டகால நலனுக்கு உகந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com