கொய்யா இலை டீ குடிச்சிருக்கீங்களா மக்களே?

Guava leaf tea
Guava leaf tea
Published on

கொய்யாப்பழத்தில் நிறைய சத்துக்களும், மருத்துவ குணங்களும் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், கொய்யா இலையும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இரண்டு கொய்யா இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து அருந்துவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

1. கொய்யா இலையில் ஆன்டி பேக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது வயிற்றில் ஏற்பட்டிருக்கும் தொற்றுக்களை நீக்க உதவும். குடலை சுத்தமாக்குகிறது. மேலும் செரிமான சுரபிகளை தூண்டி உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் வாயுவைக் குறைத்து வயிற்றின் புண்களை குணமாக்குகிறது. கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி நச்சுகளை நீக்க உதவுகிறது.

2.கொய்யா இலை டீ குடிப்பதால் அதில் உள்ள Quercetin மற்றும் Catechin என்னும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமநிலைப்படுத்தப்படுகிறது.

3.கொய்யா இலை சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டுள்ளது. இதில் உள்ள Anti inflammatory மற்றும் Anti bacterial பண்புகள் சருமப்பிரச்னைகளை நீக்கி ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது. சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்குகிறது. இதனால் எப்போதும் இளமையான தோற்றத்தோடு இருக்கலாம்.

4.கொய்யா இலையில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் கொய்யா இலையில் உள்ள பிளேவனாய்ட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்களை தளர்வாக வைத்து ரத்த அழுத்தம் அதிகரிக்க உதவும். இதனால் இதயம் தொடர்பான பிரச்னைகள், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. நரம்புகளையும், மனதையும் அமைதிப்படுத்தி நல்ல உறக்கம் வரவழைக்க கொய்யா இலை டீயை அருந்துவது சிறந்தது.

5.தலைமுடி அடர்த்தி குறைவாக உள்ளவர்கள், தலை முடி உதிர்வு ஏற்படுபவர்கள் கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தடவி மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். கொய்யா இலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த டீயை தொடர்ந்து மூன்று மாதம் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
அப்படி என்ன தான் இருக்கு இந்த லபுபு பொம்மையில்?
Guava leaf tea

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com