உங்கள் பல் மஞ்சளாக மாறிவிட்டதா? யோசிக்காம இத பண்ணுங்க!

Teeth
Natural Tips to Turn Yellow Teeth White
Published on

குழந்தையாக இருக்கும் போது பெற்றோர்கள் நம்மை கவனித்துக் கொண்டதால், நம் உடலை பற்றிய கவலைகள் நமக்கு இல்லாமல் இருந்தது. ஆனால், வளர்ந்தபின்பு தன்னை தானே பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பெற்றுவிட்டோம் அல்லவா? நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தனித்தனியாக அக்கறை காட்டும் சூழலில் வாழ்ந்து வருகிறோம். அந்த வகையில், இந்த பதிவு மஞ்சள் பற்களை சரி செய்வதற்கான வழிகளை விளக்குகிறது.

காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்குவதோடு, அதன் மேல் உள்ள அக்கறையை முடித்துக் கொள்கின்றனர். அதற்கு பிறகு, பற்களுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை சற்றும் சிந்தியாமல் அதிகமாக எடுத்துக் கொண்டு, என்றோ ஒருநாள் கண்ணாடியில் பற்களை பார்க்கும் போது பற்கள் மஞ்சளாக மாறிவிட்டதோ என்று கவலை கொள்கின்றனர். சரி கவலை வேண்டாம், இயற்கை அளிக்கும் பொருட்களை வைத்தே மஞ்சள் பற்களை எப்படி குணப்படுத்துவத்தென்று பாப்போம்!  

பற்களின் மஞ்சள் கறைகளை போக்க 4 டிப்ஸ்!

உப்பு கொண்டு பல் துலக்குதல்

ஒரு சிட்டிகை தூள் படிகாரம் மற்றும் சிறிதளவு உப்பு போன்றவற்றை கலந்து, உங்கள் பற்களை துலக்க வேண்டும். பின் வாயை நன்கு தண்ணீரில் கழுவ வேண்டும். உங்கள் பற்களில் மாற்றம் ஏற்படுவதே நீங்களே பார்க்க முடியும். ஆனால் இதை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது.

இதையும் படியுங்கள்:
பெண், பெண்ணால்..!
Teeth

ஆப்பிள் சைடர் வினிகர்

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைக்க வேண்டும். இந்த தண்ணீரை வாயில் ஊற்றி சுமார் 1 நிமிடம் சுழற்ற வேண்டும். பிறகு இதை உமிழ்ந்து வாயைத் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். ஆனால் ஆப்பிள் சைடர் வினிகரை குறைவாகப் பயன்படுத்துவது அவசியம்.

Healthy teeth
Healthy teethhttps://www.onlymyhealth.com

பேக்கிங் சோடா

ஒரு டேபிள் ஸ்பூன் அளவிலான பேக்கிங் சோடாவை இரண்டு தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடுடன் கலந்து பேஸ்ட்டாக உருவாக்கி நன்கு துலக்க வேண்டும். பின்பு வாயை நன்றாக தண்ணீர் கொண்டு அலச வேண்டும்.   இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால், உங்கள் பற்கள் மஞ்சள் நிறம் மாறி வெண்மையாக மாறும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் செய்ய ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வாயில் ஊற்றி சுழற்ற வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் வாயைக் கழுவ வேண்டும். அதன்பின், பற்களைத் துலக்க வேண்டும். இந்த நடைமுறை உங்கள் மஞ்சள் பற்களை மாற்றுவதுடன், ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பொடித்த கரித்தூள்

தூள் செய்யப்பட்ட கரியை வைத்து இரண்டு நிமிடம் மெதுவாக பற்களை துலக்க வேண்டும். பின் வாயைத் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தலாம்.

இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் பற்களின் உள்ள மஞ்சள் கறையை நீக்கி பிரகாசமான பற்களை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com