எலுமிச்சையை அதிகம் பயன்படுத்துவோர் கவனத்துக்கு!

Attention those who use lemon a lot!
Attention those who use lemon a lot!
Published on

லகமெங்கும் பெருவாரியான மக்களின் விருப்ப ஜூஸாக லெமன் ஜூஸ் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கவும், புத்துணர்ச்சி கொடுக்கவும் லெமன் ஜூஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கின்றனர். இது மட்டுமின்றி, எலுமிச்சையை பல வகைகளிலும் உட்கொள்கிறார்கள். இது நம் சருமப் பிரச்னைகளை நீக்கி, உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தைக் கொடுக்கக் கூடியது.

எலுமிச்சையில் அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருப்பதால் அது நம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய பிரச்னைகளைக் குறைக்கிறது. மேலும், எலுமிச்சையோடு உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்வதால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, வாயில் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்கும். இந்தப் பதிவில் எலுமிச்சை பற்றிய மேலும் சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சையை ஒரு அற்புதமான பழம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் தோலிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது பலருக்குத் தெரிவதில்லை. எலுமிச்சை ஜூசை குடித்து பெறும் சத்துக்களை விட, அதன் தோலைத் தின்பதால் அதிக சத்துக்கள் கிடைக்கின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.

எலுமிச்சை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான விட்டமின் ஏ, இ, சி, பாஸ்பரஸ், பி6, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற அனைத்துமே கிடைக்கும். எலுமிச்சை தோலை யாராலும் அவ்வளவு எளிதில் சாப்பிட முடியாது. அதை சாப்பிடுவதற்கு சிறந்த வழி பிரிட்ஜில் வைத்து நன்றாக உறைய வைத்து சாப்பிடுவதுதான். எலுமிச்சை தோலை நன்றாக உறைய வைத்து பேஸ்ட் போல அரைத்து நாம் சாப்பிடும் சாலட், சூப் போன்றவற்றில் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

எனவே, அடுத்த முறை எலுமிச்சை ஜூஸ் குடிக்கும்போது, அதன் தோலையும் சிறிதளவு ஜூஸில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com