பெண் குழந்தைகளின் ஆரோக்கியம். என்னென்ன ஊட்டச்சத்து அவசியம்?

தேசிய ஊட்டச்சத்து வாரம்- (செப்டம்பர் 01- செப்டம்பர் 07)
பெண் குழந்தைகளின் ஆரோக்கியம். என்னென்ன ஊட்டச்சத்து அவசியம்?

பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு குழந்தை கருவில் உள்ளபோதும், பிறந்து சில மாதங்களிலும் அக்குழந்தைக்கேற்ற சத்தான உணவினைக் கொடுத்து வருவதுதான் முக்கியம். தான் கருவுற்றிருக்கும்போதே தாய் தன் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். வருமுன் காப்போம் என்பதுபோல, தன் குழந்தை ஆரோக்யமாக வளரத் தேவையான உணவுப் பழக்கங்களை அந்தத் தாய் கருவுற்றிருக்கும்போதே மேற்கொள்ள வேண்டும். தங்கள் உணவில் பொதுவாக எடுத்துக்கொள்ளும் புரதச்சத்து அளவினை விட 10 கிராம் கூடுதல் புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட உணவில் பால், முட்டை சேர்த்துக் கொள்வது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது இதெல்லாமும் அவசியம்.

சின்னஞ்சிறு குழந்தையாகட்டும், வளரும் பருவக் குழந்தையாகட்டும், டீ, தண்ணீர், பால் போன்றவற்றில் பிஸ்கட் நனைத்துத் தருவது, சாதத்தை மிக்ஸியில் அரைத்து தருவது, சிறிதளவு உணவையே மணிக்கணக்கில் ஊட்டி விடுவது என நாம் அக்குழந்தைக்குத் தவறான உணவு வழக்கத்தை பழக்கப் படுத்தி வருகிறோம். குழந்தைகள் கம்மியாகத்தான் சாப்பிடுவார்கள் என்பது தெரிந்தும் தேவையற்றதைக் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விடுத்து,  கொடுக்கும் சிறிதளவு உணவினைச் சத்துள்ளதாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த 6-18 மாதங்களுக்குள் பால், பழம், முட்டை என எல்லா வகையான உணவையும் (சைவம், அசைவம்) கண்டிப்பாகக் கொடுத்து பழக்க வேண்டும். காரம், எண்ணெய் போன்றவற்றின் அளவைக் குறைத்துக்கொண்டால் போதும். அந்தச் சமயத்தில் அக்குழந்தை சாப்பிட்டுப் பழகுவதுதான் பிற்காலத்தில் எந்த உணவையும் தவிர்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தெம்பாக இருப்பதற்கான அடித்தளம். அதன்பிறகும் இதுபோன்ற சத்தான உணவினை அன்றாடம் கொடுத்துப் பழக்கினால் குழந்தைக்குத் தானாகவே தேவையான சத்தும் எடையும் கிடைக்கும். இதுவே, சரியான உடல் எடையைத் தக்க வைத்துக் கொள்வதற்கானச் சிறந்த வழி.

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பூப்படையும் வயது, 15-17ஆக இருந்தது. ஆனால், இப்போது 10-12 வயதிலேயே பெண் பிள்ளைகள் வயதிற்கு வருகிறார்கள்.  பொதுவாக மிக ஒல்லியாக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண் குழந்தைகள் பருவமடைந்து சில நாட்களில் சரியான எடைக்கு வந்துவிடுவார்கள். இதற்கான காரணம் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மட்டுமல்ல பருவமடைந்ததும் அவர்களுக்குத் தரப்படும் சத்தான உணவும்தான். உளுந்து களி, நாட்டு முட்டை போன்ற சத்து மிகுந்த பொருட்களை அதிகம் கொடுப்பதுதான் அக்குழந்தையின் உடல் எடையும், ஆரோக்கியமும் அதிகரிக்கக் காரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com