வெல்லம் சேர்த்த டீயிலிருக்கு வித விதமான நன்மைகள்!

Jaggery Tea
Jaggery Tea

மீப காலங்களுக்கு முன்பு வரை டீயில் இஞ்சி டீ, ஏலக்காய் டீ மட்டுமே பிரபலமாயிருந்தன. தற்போது பிளாக் டீ, க்ரீன் டீ, மசாலா டீ, மூலிகை டீ என பல வகை டீ உபயோகத்திற்கு வந்துள்ளன. அவற்றுள், 'குர் கி சாய்' எனப்படும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் டீ இப்போது பிரபலமாக உள்ளது. இந்த டீயின் மூலம் நம் உடலுக்குக் கிடைக்கும் பற்பல நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ அதிக ஊட்டச்சத்து மிக்கது. இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், தாதுக்கள், மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அதிகளவு இரும்புச் சத்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும். அதோடு, இரத்தத்தையும் இது சுத்திகரிக்கிறது. ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி, அனீமியா நோயை அண்டவிடாமல் காக்கும். இரும்புச் சத்தை உறிஞ்ச உதவி, செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல் நீங்கும். உடலின் மெட்டபாலிஸம் சிறந்த முறையில் நடைபெறும்.

ஆன்டி ஆக்சிடண்ட்டானது லிவர் மற்றும் மொத்த உடம்பிலும் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வல்லது. உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. மக்னீசியமானது சருமத்திலுள்ள மருக்களை நீக்கி, சருமத்தை பளபளப்பாக்கச் செய்யும். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.

மேலும், வெல்லமானது மைக்ரேன் தலைவலியை நீக்கும். மூட்டு வலியை குணமாக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களின் தசைப் பிடிப்பை நீக்கும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எடை குறைக்க உதவும். இருமல், சளி போன்றவற்றை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
வாயு கோளாறு பிரச்னைகளுக்கு நிவாரணமாகும் ஓமம்!
Jaggery Tea

இப்படிப் பல நன்மைகள் கொண்ட வெல்லம் சேர்த்து  டீ தயாரிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேயிலை சேர்க்கவும். பின் அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி துருவல், அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவும். கொதி வந்ததும் பால் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து, பிறகு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி சூடாக அருந்தவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com