ஆனியன் ஜூஸுடன் வெல்லம் சேர்ப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்!

Jaggery in onion juice
Jaggery in onion juicehttps://tamil.webdunia.com
Published on

வெங்காயமும் வெல்லமும் எதிரும் புதிருமான குணமுடையவை. வெங்காயத்தில் காரத்தன்மையும் வெல்லத்தில் இனிப்பு சுவையும் உள்ளன. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் இவை இரண்டும் ஒன்று சேரும்போது, அதன் சுவையும் அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளும் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஆனியன் ஜூஸுடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வெங்காயத்தில் சல்ஃபர் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது கல்லீரலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். என்சைம்களை ஊக்குவித்து நச்சுக்களை வெளியேற்றும் செயல் 'நச்'சென்னு நடைபெறச் செய்கிறது. ஆனியன் ஜூஸும் வெல்லத்திலுள்ள இரும்புச் சத்தும் இணைந்து இரத்தத்தை சுத்திகரிக்கவும், நச்சுக்களையும் அசுத்தங்களையும் உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகின்றன.

இருமல், சளி, மூக்கடைப்பு போன்ற சுவாசப் பாதை சம்பந்தமான கோளாறுகளை குணப்படுத்த ஆனியன் ஜூஸ் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதனுடன் வெல்லம் சேரும்போது அதன் ஆறுதல்படுத்தும் குணமானது சுவாசப் பாதை கோளாறுகளை குணப்படுத்துவதோடு, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் புகுவதையும் தடுத்து நிறுத்துகிறது.

ஆனியன் ஜூஸ் மற்றும் வெல்லம் இரண்டிலுமே ஜீரணத்தை சிறப்பாக்க உதவும் குணமுள்ளது. வெல்லம் ஜீரணத்தை ஊக்குவிக்கும்போது ஆனியன் ஜூஸ் உணவுகளை உடைக்க உதவி புரிந்து ஜீரணத்தை எளிதாக்குகிறது. மேலும் வீக்கங்களைக் குறைக்கவும் அஜீரணக் கோளாறுகளை குணமாக்கவும் இவை உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
நார்ஸிச மனப்பான்மை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள 9 வேறுபாடுகள்!
Jaggery in onion juice

ஆனியன் ஜூஸிலுள்ள வைட்டமின் C வெல்லத்திலுள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது அனீமியா நோய் உள்ளவர்களின் இரும்புச் சத்துக் குறைபாட்டை நீக்க உதவும். ஃபிரஷ் ஆனியன் ஜூஸுடன் ஒரு டீஸ்பூன் வெல்லமும் சிறிது லெமன் ஜூஸும் சேர்த்தால் ஒரு புத்துணர்ச்சி தரும் பானம் தயார். வெல்லத்தில் இயற்கையான இனிப்பு சுவை, இரும்பு சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சத்துக்களும் உள்ளன. அதிகம் பதப்படுத்தப்படாத வெல்லத்திலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு தொடர்ந்து சக்தி அளிக்க உதவுகின்றன.

வெங்காயம் மருத்துவ குணம் கொண்டது. இதிலுள்ள குர்செடின் (Quercetin) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் C, B6 போன்றவை இதய ஆரோக்கியம் காக்க உதவி புரிகின்றன. ஆனியன் ஜூஸை சாலட் ட்ரெஸ்ஸிங்காகவும், உணவுகளை சமைக்கும் முன் ஊற (marinate) வைக்கவும் உபயோகப்படுத்தலாம். வெங்காயத்தை மருத்துவ முறையிலோ அல்லது சமையலில் சேர்த்தோ எப்படி உட்கொண்டாலும் அது உடலுக்கும் மனதுக்கும் ஊட்டம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com