இந்த பூவை சாப்பிட்டால் ஒரு நோயும் உங்களை அண்டாது! 

Artichoke
Artichoke
Published on

கூனைப் பூ (Artichoke) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? பெரும்பாலும், இவற்றை நீங்கள் YouTube, Instagram போன்ற தளங்களில் பார்த்திருப்பீர்கள். இதன் வடிவமும், சுவையும் வித்தியாசமாகவே இருக்கும். காய்கறி வகையைச் சேர்ந்த இந்த பூ பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இந்தப் பதிவில் கூனைப்பூவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.‌

கூனைப் பூவில் நார்ச்சத்து, உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன.‌ குறிப்பாக, இதில் உள்ள சினாரின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.‌ கூனைப் பூ சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும் இது நல்ல கொழுப்பை உறிஞ்சுவதற்கு உதவி, குடல் நலனை மேம்படுத்துகிறது. 

இந்த பூவில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்தநாளங்களைப் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

கூனைப் பூவில் உள்ள சினாரின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட், கல்லீரலை டீட்டாக்ஸ் செய்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.‌ இது கல்லீரல் வீக்கம் கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். 

இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.‌

கூனைப் பூவில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இது உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. மேலும், இந்த பூவில் உள்ள சில சேர்மங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.‌

இதையும் படியுங்கள்:
இரவில் மட்டுமே மலரும்; நறுமணம் வீசும்; மனதை மயக்கும் பச்சை நிறப்பூ - அது என்ன பூ?
Artichoke

இப்படி கூனைப் பூ, நம் உடலுக்கு பலவகையான நன்மைகளைத் தரும் ஒரு அற்புதமான காய்கறி ஆகும்.‌ இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. எனவே, உங்கள் உணவில் கூனைப் பூவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நமது ஊர்களில் கிடைப்பது அரிதுதான் என்றாலும், எப்போதாவது கிடைத்தால் நிச்சயம் வாங்கி சாப்பிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com