கோலா கொட்டை பொதுவாக ஒரு பசுமையான மரத்தின் விதையை குறிக்கிறது. இது ‘கோலா அக்குமினேட்டா மற்றும் கோலா நிடிடா’ என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த வகை தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக்காடுகளில் குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவில் வளரும் பண்டைய மரபுகளில் சிறப்பான ஒரு தாவரமாகக் கருதப்படுகிறது. 40 முதல் 60 அடி உயரத்தில் எட்டும் மரங்கள். இவை நட்சத்திர வடிவ பழங்களை உற்பத்தி செய்கின்றன. ஒவ்வொரு பழத்திலும் இரண்டு முதல் ஐந்து கோலா கொட்டைகள் உள்ளன. இந்தக் கொட்டைகள் பீன்ஸ் போன்ற வடிவத்தில் இருக்கும். இந்த சிறிய பழத்தில் காஃபின் நிரம்பியுள்ளது.
புதிய கோலா கொட்டை ஒரு கசப்பான உருளைக்கிழங்கு போன்ற சுவை கொண்டது. இதை நீண்ட நேரம் மென்று சாப்பிடும்போது இனிப்பு தன்மை அதிகரிக்கிறது. இது ரோஜா இதழ்களை நினைவூட்டும் இனிமையான மலரின் நறுமணத்தை கொண்டுள்ளது. கொட்டையின் அமைப்பு திடமானது. 1800ம் ஆண்டில் கோலா மற்றும் கோகோயின் சாறுகளை சர்க்கரை, கார்பனேற்றப்பட்ட நீர் மற்றும் பிற பொருள்களுடன் கலந்து சுவையூட்டும் பொருளாக கோகோ கோலா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கோலா கொட்டைகள், ஆற்றல் பானங்கள், மருந்து இரசாயன மற்றும் சாயப் பொருட்கள் தொழில்கள் மற்றும் பிறவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
கசப்பான கோலா கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள்:
1. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: கசப்பான கோலா பருப்புகள் ஒரு காஃபின் பொருள். இது வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. கலோரிகளை எரிப்பதை அதிகரிக்கிறது.
2. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: கசப்பான கோலாவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து உள்ளன. செரிமானத்தை மேம்படுத்துவது, உதிர வாதங்களை கட்டுப்படுத்துவது போன்ற மருத்துவப் பயன்பாடுகள் நிறைந்தது.
3. பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிரான ஆயுதங்கள்: இது வெறும் நட் அல்ல. இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் உள்ளன. அதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
4. சுவாச கவசம்: கோலா கொட்டைகள் சுவாச செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. சுவாசத் திறனை மேம்படுத்துகிறது. இது ஆஸ்துமா நோய்களுக்கு நன்மை பயக்கும்.
5. பரிசு பார்வையில் கண்: இந்தப் பருப்புகள் நல்ல கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். கண் பார்வை கூர்மையை அதிகரிக்கிறது.
6. உற்சாகத்தை அளிக்கிறது: கோலா கொட்டையில் இருக்கின்ற காஃபின் மற்றும் தையோபிரமைன் போன்ற பொருட்கள் உடலை உற்சாகமாக்க உதவுகிறது. இது தற்காலத்தில் காபி, தேநீர் போன்ற பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
7. மனம் மெருகூட்டுதல்: கோலா கொட்டை சாப்பிடுவதால் மன உற்சாகம் மற்றும் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறிப்பாக ஆப்பிரிக்க மக்களிடையே பல்வேறு சமய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.
8. சமய வழிபாட்டில்: பண்டைய ஆப்பிரிக்க சமயங்களில் கோலா கொட்டை வழிபாட்டு பொருளாகவும் சமாதான ஏற்பாடுகளிலும் பயன்படுகிறது.
9. கலாசார உபயோகங்கள்: சில சமூகங்களில் திருமணங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் கோலா கொட்டை பரிமாறுவதும் மரபு ஆகும். இவை தவிர, கோலா கொட்டை தனித்துவமான சுவை மற்றும் பல்வேறு பயன்பாடுகள் கொண்டது.