குத்த வைத்து அமர்வதால் கிடைக்கும் மாயாஜால நன்மைகள்!

உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து, நோயின்றி வாழ அன்றாட வாழ்வில் இதைப் பின்பற்றுவது எப்படி?
Deep Squat | குத்த வைத்து அமர்தல்
Deep Squat | குத்த வைத்து அமர்தல்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

குத்த வைத்து அமர்வது மனித உடலின் இயற்கையான அசைவுகளில் ஒன்றாகும். குத்த வைத்து அமர்வது (Deep Squat) உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்துவதிலும், மலச்சிக்கலை தடுப்பதிலும் மிகவும் பயனுள்ள இயற்கை முறையாகும். இது இடுப்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. கீழ் முதுகு அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் உடலின் சமநிலையை உறுதி செய்கிறது. மலக்குடல் தசைப் பாதையை நேராக்கி, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளை தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இது உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன் சுறுசுறுப்பை அதிகரித்து, முதுகுவலியைக் குறைக்கவும், வாழ்நாள் முழுவதும் ஒட்டுமொத்தமாக மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக வாழவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குத்தவைத்து அமர்வதால் கிடைக்கும் நன்மைகள்:

1) மலச்சிக்கல் தடுப்பு:

இயற்கையான முறையில் குத்த வைத்து அமரும்பொழுது குடல் பாதை முழுமையாகத் தளர்ந்து மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் மலம் கழிப்பது எளிதாகி, முக்குவது போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன. தொடையானது வயிற்றுப் பகுதியை அழுத்துவதால் குடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேறுகின்றன. இது மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது.

Joint Health | குத்த வைத்து அமர்தல்
Joint Health | குத்த வைத்து அமர்தல்

2) மூட்டு ஆரோக்கியம்:

முழங்கால், கணுக்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது. இது மூட்டுகளின் இயக்கத்தை அதிகரித்து அவற்றின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) மேம்படுத்தி, தசை இறுக்கத்தை குறைத்து மூட்டுகளின் இயக்கத்தை சீராக்குகின்றன. இதன் மூலம் மூட்டு வலிகள் வராமல் பாதுகாக்கிறது.

3) ரத்த ஓட்டம் சீராகிறது:

இடுப்பு மற்றும் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கால்களில் ரத்த ஓட்டம் சீராகி தொடை, இடுப்பு மற்றும் கெண்டைக்கால் தசைகள் போன்ற உடலின் கீழ்ப்பகுதி தசைகள் வலுவடைகின்றன.

4) செரிமானம்:

குத்தவைத்து அமரும்போது தொடையானது வயிற்றுப் பகுதியை அழுத்துவதால் குடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேறுகின்றன. அடிவயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் செரிமான மண்டலம் தூண்டப்பட்டு, அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

Back Pain | குத்த வைத்து அமர்தல்
Back Pain | குத்த வைத்து அமர்தல்

5) முதுகு வலி குறைவு:

இடுப்புப் பகுதி விரிவடைவதால், கீழ் முதுகுத்தண்டில் உள்ள அழுத்தம் குறைகிறது. கீழ் முதுகு தசைகள் நீட்சியடைந்து, நீண்ட நேரம் நாற்காலியில் அமர்வதால் ஏற்படும் முதுகுவலியை குறைக்கிறது.

6) அடிவயிறு மற்றும் தசை வலிமை:

இந்நிலையில் அமர்வது வயிற்று தசைகளை (Core muscles) உறுதிப்படுத்துகிறது. இடுப்பு (Pelvic) மற்றும் வயிற்று தசைகளை சிறப்பாக செயல்பட வைக்கிறது. பெண்களுக்கான சிறுநீரகப் பாதை தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து உடலின் சமநிலையை காக்க உதவுகிறது. உடற்பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் ஸ்க்வாட் (Squat) உடற்பயிற்சியின் பலன்கள் இதில் இயற்கையாகவே கிடைக்கின்றன.

குத்தவைத்து அமர முடியாதவர்கள் அதற்கு பதிலாக நாற்காலி அல்லது சமையலறை மேடை போன்ற ஆதரவுடன் படிப்படியாக குத்த வைத்து உட்காருவதற்கு முயலலாம். எவ்வளவு தூரம் வசதியாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் மட்டுமே முதலில் கீழ் நோக்கி சென்று வரலாம். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து பழக சில வாரங்களிலேயே குத்த வைத்து உட்கார முடியும். ஆனால் வயதாக ஆக மூட்டுகள், முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முக்கியமாக கணுக்கால்களில் உள்ள நெகிழ்வுத் தன்மையை இழக்கிறோம். இதனால் குத்தவைத்து அமரும் திறன் குறைகிறது. எனவே ஏற்கனவே முழங்கால், இடுப்பு அல்லது முதுகு வலி உள்ளவர்கள் குத்தவைத்து அமர்வதை தவிர்க்கவும்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com