காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் போதும்... எடை குறைந்து, முகம் பளபளக்கும்!

Drinking water
Drinking water
Published on

நாம் தினமும் செய்யக்கூடிய சிறிய செயல்களில் ஒன்றுதான் காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது. இந்த சிறிய பழக்கம் நம் உடலுக்கு மிகப்பெரிய நன்மைகளை தருகிறது என்பது பலருக்குத் தெரியாது. தூக்கத்தின்போது நாம் இழந்த நீரை ஈடு செய்யவும், உடலின் செயல்பாடுகளைத் தூண்டவும் காலையில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இந்தப் பதிவில் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல நன்மைகள் பற்றி விரிவாகக் காண்போம். 

இரவில் நாம் தூங்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால், காலை எழுந்தவுடன் நாம் தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மேலும், காலையில் தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தை செயல்படத் தூண்டுகிறது. இது குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதனால், செரிமான நொதிகளின் உற்பத்தி அதிகரித்து உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.‌ 

நாம் உண்ணும் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள மாசுபாடுகள் காரணமாக உடலில் நச்சுக்கள் குவிந்துவிடும். காலையில் தண்ணீர் குடிப்பது, சிறுநீரின் மூலம் இந்த நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்திகரிக்கிறது. காலையில் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக கலோரி உடலில் எரிக்கப்படுகிறது. இது உடல் எடை இழப்புக்கு உதவி, உடலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. 

உடல் நீரேற்றமாக இருக்கும்போதுதான் சருமம் பொலிவாக இருக்கும். காலையில் தண்ணீர் குடிப்பது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருந்து வறட்சி மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது. மேலும், இது சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி முகப்பருக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. 

இதையும் படியுங்கள்:
பாட்டி வைத்தியம்: தலை முடி கொட்டுதா? நடிகையின் கூந்தல் ரகசியம் இதுதானாம்!
Drinking water

மூளை பெரும்பாலும் நீரால் ஆனது. எனவே, போதிய அளவு தண்ணீர் குடிப்பது மூளை செயல்பாடுகளை சிறப்பாக வைத்திருக்க உதவும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால், மூளைக்கு போதுமான நீர் கிடைத்து நினைவாற்றல் மேம்பட உதவும். 

காலையில் தண்ணீர் குடிப்பதால், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. இது ரத்தத்தை சுத்திகரித்து இதயத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது. 

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம். வெதுவெதுப்பான நீர் குடிப்பது குடலுக்கு மிகவும் நல்லது. இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
ஒரு துளி கிராம்பு எண்ணெய் போதும்! 9 நோய்களை விரட்டும்!
Drinking water

திடீரென அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் படிப்படியாக தண்ணீரின் அளவை அதிகரிப்பது நல்லது. எனவே, இன்று முதல் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் உதவும். 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com