ஒரு துளி கிராம்பு எண்ணெய் போதும்! 9 நோய்களை விரட்டும்!

clove oil
clove oil
Published on

சமையலுக்கு மணம் கூட்டப் பயன்படுத்தும் ஒரு சாதாரணப் பொருள், நம் ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்கும் சாவியாக இருந்தால்? ஆம், அதுதான் கிராம்பு (Clove)! இதன் எண்ணெய்யில் (Clove Oil) மறைந்திருக்கும் பாரம்பரிய மருத்துவ இரகசியங்கள் பல. ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படும் இந்தக் கிராம்பு எண்ணெய், உங்கள் வீட்டு மெடிசின் பெட்டியில் ஏன் இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

1. பல் வலிக்கு தீர்வு:

கிராம்பு எண்ணெய் பல் வலிக்கு நிவாரணியாகப் பயன்படுகிறது. இதில் இருக்கும் Eugenol நுண்ணுயிரை எதிர்த்து வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரிசெய்ய உதவுகிறது. இது பாக்டீரியாக்களை கொன்று ஈறு சம்பந்தமான நோய்களை  குணமாக்குகிறது.

2. நோய் எதிர்ப்பு சக்தி:

கிராம்பு எண்ணெய் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

3. நிம்மதியான உறக்கம்:

கிராம்பு எண்ணெய் (clove oil) அருமையான Stress reliever ஆக பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தும்போது மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல் உறக்கத்தை தூண்டிவிடுவதால், தூக்கமின்றி கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.

4.வலி நிவாரணி:

கிராம்பு எண்ணெய் வலி நிவாரணியாக செயலாற்றுகிறது. Arthritis, வாதநோய், தசைவலி, சுளுக்கு போன்றவற்றை குணமாக்க இந்த எண்ணெய்யை உபயோகிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பயணம் போனாலே வாந்தியா? இந்த 1 பொருளை மட்டும் கையில் வெச்சுக்கோங்க!
clove oil

5. பூச்சி, பூஞ்சை எதிர்ப்புசக்தி:

கிராம்பு எண்ணெய்யில் இருக்கும் Eugenol பூச்சிகளை விரட்டக்கூடிய தன்மையைக் கொண்டது. Eugenolல் உள்ள பூஞ்சை எதிர்ப்புசக்தி செடிகளில் ஏற்படும் பூஞ்சை நோயையும் குணப்படுத்த உதவுகிறது.

6. சருமத்தின் அழகு:

கிராம்பு எண்ணெய் (clove oil) சருமப் பிரச்னைகளுக்கும் வெகுவாக பயன்படுகிறது. சருமத்தில் உள்ள Acneயை குணப்படுத்துகிறது. சருமம் புத்துயிர் பெறவும், வயதாவதைத் தடுக்கவும் உதவுகிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை குறைக்கிறது, வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தொண்டையிலே கீச்கீச்சா?கரகரப்பா? உடனடி நிவாரணத்துக்கு சட்டுப்புட்டு வைத்தியம்!
clove oil

7. மூச்சுப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி:

கிராம்பு எண்ணெய் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணியாக உள்ளது. இருமல், சளி, ஆஸ்மா, சைனஸ், வறண்ட தொண்டை மற்றும் காசநோய் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

8. சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் அரிய மருந்து:

கிராம்பில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் தடுக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் உணவில் கிராம்பை சேர்த்துக்கொள்வது நல்லதாகும்.  

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன 20 ரகசியங்கள்... இவை தெரிந்தால் மருத்துவரையே மறந்துவிடலாம்!
clove oil

9. தலைவலியைத் தகர்த்தெறியும்:

தலைவலிக்கு கிராம்பு எண்ணெய்யை (clove oil) பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவிக்கொள்வது, பாலில் கிராம்பு போட்டு குடிப்பது தலைவலியை குணப்படுத்துகிறது. எனவே, கிராம்பு எண்ணெய்யை அளவாகப் பயன்படுத்தி வருவது உடல் சம்பந்தமான பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.

குறிப்பு: கிராம்பு எண்ணெய்யை எப்போதும் அளவாகவே பயன்படுத்த வேண்டும். எந்தவொரு தீவிர மருத்துவப் பயன்பாட்டிற்கும் முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com