மீல் மேக்கர் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா?

Soya chunks
Soya chunks
Published on

காளான், பன்னீருக்கு அடுத்தப்படியாக சைவப் பிரியர்களின் உணவுப் பட்டியலில் மீல் மேக்கருக்கும் இடம் உண்டு. விலை மலிவாக கிடைகும் மீல் மேக்கரை 'சோயா சங்க்ஸ்' என்றும் அழைப்பதுண்டு. சோயாவின் மாவிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதில் கொழுப்புகள் கிடையாது. அதோடு, இதில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளனவாம்.

மீல் மேக்கர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • மீல் மேக்கரில் சிக்கன், முட்டை, இறைச்சியில் உள்ளதை விட அதிக புரதம் உள்ளது. எனவே, புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீல் மேக்கர் ஒரு சிறந்த உணவாகும்.

  • மீல் மேக்கரில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்டராலை அதிகரிக்கிறது.

  • இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கவும் மீல் மேக்கர் உதவுகிறது.

  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மீல் மேக்கர் ஒரு நல்ல தேர்வாகும். ஏனெனில், நார்ச்சத்து நிறைந்த மீல் மேக்கர், நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போன்ற உணர்வைத் தருவதோடு, பசியையும் கட்டுப்படுத்துகிறது. இதனால், உடலில் மெட்டபாலிசத்தின் வேகம் அதிகரித்து உடல் எடை குறையும். அதோடு, உடலில் உள்ள கொழுப்புகளும் குறைய ஆரம்பிக்கும்.

  • இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சீரான செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியங்களின் அளவை அதிகரிக்கும். எலும்பு வலு இழப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்க உதவுகிறது. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:
புளிக்க வைத்த உணவுகளில் இத்தனை நன்மைகளா? இப்பதானே புரியுது!
Soya chunks
  • இதிலுள்ள ஐசோஃப்ளேவோன்கள் மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்து, சீரான மாதவிடாய்க்கு உதவி புரிகிறது. அதோடு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது. மனதை அமைதியாகவும், புத்துணர்வுடனும் வைக்க உதவுகிறது.

  • மீல் மேக்கர், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

    மீல் மேக்கரில் பல நன்மைகள் இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. விருப்பத்திற்கேற்ப, எப்போதாவது ஒருநாள் மட்டும் எடுத்துக் கொள்வது பிரச்சனை இல்லை. அதேசமயம், ஒரு நபர், ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை என மாதம் இருமுறை மீல் மேக்கர் எடுத்துக்கொண்டால் போதுமானது. 

தேவைக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, அது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, ஒவ்வாமை, நீடித்த மாதவிடாய் தலைவலி, தசை மற்றும் எலும்பு வலிகள், மயக்கம் மற்றும் சில சமயங்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகாமல் மீல்மேக்கர் சாப்பிடுவது பெரிய பிரச்சனை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com