
பூண்டு அதன் சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை பூண்டை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் மருத்துவ குணம் மேலும் அதிகரிக்கிறது. அந்த பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. வெள்ளை பூண்டு மற்றும் இரண்டு வெற்றிலையை அரைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறைந்துவிடும்.
2. பூண்டுடன் சிறிது ஓமம் சேர்த்து நசுக்கி கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்துவர குழந்தைகளுக்கு வரும் வாந்தி, கொட்டாவி குறையும்.
3. பூண்டு சாற்றில் சிறிது உப்பு சேர்த்து உடம்பில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு சரியாகும்.
4. குப்பைமேனி மற்றும் பூண்டை அரைத்து அந்த சாற்றை எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்துவர குழந்தைகள் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
5. பச்சை பூண்டை உண்பதால் உடல் பலம் பெற்று உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலி மறையும். இரத்த அழுத்தம் குறையும்.
6. பூண்டை பொடி செய்து தேனில் கலந்து தலை, புருவம் ஆகிய இடங்களில் பூச்சிவெட்டால் முடிவளராமல் இருக்கும் இடத்தில் தடவி வர முடி வளரும்.
7. பூண்டை நசுக்கி சாறு எடுத்து அதை உள்நாக்கில் தடவி வர உள்நாக்கு வளர்ச்சி குறையும். பூண்டுடன் எழுமிச்சை சாறு சேர்த்து அரைத்து இருவேளை சாப்பிட்டு வர கீழ்வாதம் குணமாகும்.
8. பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்து தின்றால் திடீரென்று வரும் வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் குறையும்.
9. ஒரு வெள்ளை பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை இவற்றை சேர்த்து அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டால் குளிர்க்காய்ச்சல் குறையும்.
10. பூண்டை பாலில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்த குழாயில் கொழுப்புகள் படியாது.
11. பூண்டை பொன்னாங்கன்னி கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோய் நீங்கும்.
12. பூண்டு சாற்றையும், இஞ்சி சாற்றையும் சமஅளவு கலந்து காலை, மாலை என இருவேளைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டுவர நெஞ்சுக் குத்து குணமாகும்.
இத்தகைய பலன்களைக் கொண்ட பூண்டை நீங்களும் உணவில் முறையாக பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.