அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தேன் மருத்துவம்!

Health benefits of honey medicine
Health benefits of honey medicinehttps://tamil.boldsky.com

ர்க்கரையை விட தேன் சிறந்த உணவு என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து உள்ளது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. பாலுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த இது நன்கு வேலை செய்கிறது. இது மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. அழற்சி எதிர்ப்பு பண்பு தேனில் உள்ளது. தேனை ஈறுகளில் தடவி வந்தால், வாய் ஆரோக்கியம் மேம்படும். லேசாக கைகளால் ஈறுகளில் தேனை தேய்ப்பது நன்மை பயக்கும்.

மோரில் தேன் கலந்து குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பலவீனமான நினைவாற்றல் உள்ளவர்கள், விஷயங்களை நினைவில் கொள்வது கடினம், அவர்கள் தேனை உட்கொள்வது நல்லது. எலுமிச்சம் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் சூட்டை குறைக்கும். கோடையில் அதிக வெப்பத்தால் தொந்தரவு உள்ளவர்கள் அல்லது உடலில் வெப்பம் உள்ளவர்கள் இதனை அருந்த வேண்டும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் தண்ணீருடன் தேனை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலை நச்சுத்தன்மையிலிருந்து விலக்கி, உடல் எடை குறைப்பை எளிதாக்குகிறது. தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. சூடான தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அல்லது 15 கிராம் தேனில் 65 கலோரிகள் உள்ளன. 17 முதல் 18 கிராம் சுகர் இதில் உள்ளது. தேனில் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை உள்ளது. இந்நிலையில் தேனை முகத்தில் பூசி வர, அது வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்தை சரி செய்யும்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமடையும். இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான குணங்கள், மூச்சுக்குழல் அழற்சியை குணமாக்கும். இருமலுக்கு தேன் ஒரு சிறந்த தீர்வாகும். இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் நிரம்பியுள்ளது. ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு சில துளிகள் இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிடுவது இருமல் நீங்கும். நீங்கள் அதை சூடான எலுமிச்சை அல்லது கிரீன் டீயிலும் சேர்க்கலாம்.

தீக்காயங்கள், காயங்கள் மற்றும் அழுத்தத்தால் ஏற்படும் புண்களுக்கும் தேன் இயற்கை நுண்ணுயிரிகள் எதிர்ப்பு களிம்பாக செயல்படுகிறது. இதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு காரணிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி விரைவில் குணமாக்க உதவுகிறது, வலிகளை குறைப்பதோடு தழும்புகள் ஏற்படுவதையும் தவிர்க்க உதவுகிறது.  சர்க்கரை நோயினால் வரும் புண்களுக்கு தேன் அருமருந்து.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை அட்ராக்ட் செய்யும் 8 வழிகள்!
Health benefits of honey medicine

தேனில் பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ், வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய துடிப்பையும் சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தேன் மன அழுத்தத்தை சரியாக்குகிறது. நரம்பு மண்டலத்தை, ஆக்ஸிடேஷன் செய்யாமல் இருக்க உதவுகிறது. சிறந்த ஹார் கண்டிஷனராக செயல்படுகிறது. தேனை அதிகம் சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிக்கும். மேலும் டயபடிஸ் பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளது. வயிற்றுப் புண்களை உண்டாகும் ஹெலிகோ பாக்டர் பைலோரி நுண்ணுயிரியின் வளர்ச்சியை தடுக்க மற்றும் இரைப்பை அழற்சியையும் தடுக்க உணவுக்கு முன் கொஞ்சம் தேன் சாப்பிட நல்ல பலனை பெறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருஞ்சீரகத்தை பொடி செய்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவில் படுக்கும் முன் சாப்பிட உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் நன்கு இயங்கும். சகல நோய்களும் தீரும். தேன் எந்தளவுக்கு அடர் நிறமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கும். குறிப்பிட்ட மலர்களிலிருந்து பெறப்படும் தேனில் மருத்துவ குணங்கள் அதிகமிருக்கும் என்கிறார்கள். உதாரணமாக முருங்கை பூ தேன். தேனை காலை உணவோடு சேர்த்து சாப்பிடலாம், பழங்களோடு, தின்பண்டங்களோடு, மூலிகை தேநீர்களிலும் கலந்து சாப்பிடலாம். தயிரின் புளிப்பு தன்மையை குறைக்க தேன் கலந்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com