எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நல்ல உறக்கம் வரும்.
எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும். சர்க்கரை நோயாளிகளின் நீரிழப்பை ஈடுகட்டும்.
எலுமிச்சை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை குறையும். மேலும் இது வைட்டமின் சி குறைபாட்டை சரிசெய்யும்.
காலையில் உடற்பயிற்சி செய்து, அப்போது வெளிவரும் வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும். எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வருவது, அப்படி வெளியேறும் சோடியம் இழப்பை சரி செய்யும்.
எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
எலுமிச்சை சாற்றை உப்பு நீரில் கரைத்து தொடர்ந்து குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம்.
குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் இரவு நேரத்தில் எலுமிச்சை சாறுடன் உப்பு, இஞ்சி கலந்து குடித்து வரலாம். தொடர்ந்து இந்த பானத்தைப் பருகி வந்தால் இயற்கை முறையில் ஆண், பெண் இருவருக்கும் கரு வளத்தை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.
தூக்கத்தில் இருந்து எழும்போது பலருக்கும் உடல் டீஹைட்ரேட் ஆகிவிடுகிறது. டீஹைட்ரேஷனை போக்க எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த நீர் சிறந்தது.
சுடுநீரில் எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்
எலுமிச்சை சாறு உப்பு கலந்து குடிப்பது கடுமையான உடல் உழைப்பைக் கொடுப்பவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் என இருவருக்கும் ஆற்றலை வழங்கக் கூடியது.