சிறு மாதுளை போல் இருக்கும் மெட்லர் பழம்!

Medlar Fruits
Medlar Fruits
Published on

தெற்கு ஆசியாவில் தோன்றிய இந்தப் பழம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு சிறிய மாதுளம்பழம் போல் இருக்கும் இந்த மெட்லர் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

மெட்லர் பழத்தின் நன்மைகள்:

  • தினமும் இரண்டு அல்லது மூன்று மெட்லர்  பழங்களை உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

  • இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டம் பாய வழிவகுக்கிறது.

  • இதனால், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு, இரத்த அழுத்தப் பிரச்சனை போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க மெட்லர் பழங்கள் உதவிபுரிகின்றன.

  • மெட்லர்  பழத்தில் உள்ள இரும்புசத்து மற்றும் மாங்கனீசு போன்றவை உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திற்கு உதவுகின்றன. மேலும், இரத்த சோகை பிரச்னைகளைத் தடுக்கின்றன.

  • மெட்லர் பழங்களில் உள்ள  வைட்டமின் பி ஆனது நரம்பு மண்டல செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும் வளர்சிதை மாற்றத்திலும்  முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணுமா? அப்போ உணவுல இதையெல்லாம் சேர்த்துக்கோங்க..
Medlar Fruits
  • இதில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றப் பண்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சரும செல்களைப் பாதுகாக்கின்றன.

  • அதோடு, அழற்சி மற்றும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.  

  • பெண்களின் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு மெட்லர் பழம் உதவுகிறது.

  • இதில் உள்ள நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தவும், சீரான குடல் இயக்கத்திற்கும், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதிலும், சீரான  உடல் எடையை பராமரிப்பதிலும் உதவி புரிகிறது. 

  • மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்திடுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாக இந்த மெட்லர் பழம்  கருதப்படுகிறது.

பொதுவாக எந்த ஒரு பழமாக இருந்தாலும், பறித்த உடனே புதிதாக சாப்பிடத் தான் நம் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இந்தப் பழத்தை பறித்த உடனே சாப்பிட முடியாது. நன்கு பழுத்து கசிந்த பின்னர்தான் இவை கூடுதல் சுவையைத் தருகின்றன. 

நன்கு பழுத்த மெட்லர் பழத்தை அப்படியே உண்ணலாம் அல்லது வறுத்தோ, சுட்டோ, தேனில் ஊறவைத்தும் கூட உண்ணலாம்.  ஜாம், ஜூஸ், ஜெல்லி மற்றும் பானம் தயாரித்தும் உண்ணலாம். 

இந்தப் பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், முக்கியமாக இதன் விதையை தவிர்த்துவிட்டு பழத்தை மட்டும்  உண்பது நல்லது.  மெட்லரின் விதைகளில்  ஹைட்ரோ-சியானிக் அமிலம்  இருப்பதால் அவை விஷதன்மை உடையதாக  இருக்கலாம். எனவே,  ஜாக்கிரதை மக்களே..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com