எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணுமா? அப்போ உணவுல இதையெல்லாம் சேர்த்துக்கோங்க..

Happiness
Happiness
Published on

மகிழ்ச்சியாக இருக்க விரும்பாத மனிதர்களை இல்லை. நம்முடைய வ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கொண்டு செல்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முக்கியமான பங்கு நாம் உண்ணும் உணவுகளுக்கும் உண்டு. அந்த வகையில், மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் பற்றியும், அந்த ஹார்மோன்களை செயல்பட தூண்டும் உணவுகளை பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.

மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள்:

இதய துடிப்பு மற்றும் செரிமானம் போன்ற பல அத்தியாவசிய செயல்முறைகளில் ஈடுபடும் ஹார்மோன்களும் உண்டு. அதேசமயம், மனநிலை மற்றும் உணர்வுகளை ஊக்குவிக்கும் ஹார்மோன்களும் நம் உடலில் உள்ளன.

செரோடோனின், டோபமைன், ஆக்ஸிடாசின் மற்றும் எண்டோர்பின் ஆகிய இந்த நான்கு ஹார்மோன்களும் மகிழ்ச்சி, அன்பு போன்ற நேர்மறையான உணர்வுகளை ஊக்குவிக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் ஆகும்.

இந்த ஹார்மோன்கள் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தவும், மற்றவர்களிடம் அன்பு செலுத்தவும், மகிழ்ச்சியை உணரவும் வைக்கின்ற தூதர்கள். இந்த நான்கு ஹார்மோன்களும் வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

டோபமைன் என்ற ஹார்மோன் மகிழ்ச்சி உணர்வைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரோடோனின் ஹார்மோன் நமது மனநிலையை ஒருங்கிணைப்பதிலும், நிலைப்படுத்துவதிலும் ஈடுபடுகிறது. ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் பிணைப்பு, அன்பு, நம்பிக்கை போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. கடைசியாக, எண்டோர்பின் ஹார்மோன் வலி நிவாரணம், சீரான நிலை, தளர்வு, ஓய்வு, நிம்மதி போன்றவற்றை ஊக்குவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
காலையில் வெறும் வயிற்றில் உண்ணக்கூடாத 10 பழ வகைகள் தெரியுமா?
Happiness

மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டும் உணவுகள்:

எவ்வாறு ஒவ்வொரு ஹார்மோன்களும் வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனவோ, அதுபோல ஒவ்வொரு ஹார்மோன்களையும் ஊக்குவிக்க வெவ்வேறு வகையான உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

பூசணிவிதைகள், அன்னாசிப்பழம் மற்றும் நட்ஸ் போன்ற உணவுகள் செரோடோனின் ஹார்மோன்களை ஊக்குவிக்கின்றன. இவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, நாள் முழுக்க நமது மன நிலையையும் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள உதவும்.

வாழைப்பழம், பாதாம் மற்றும் தர்பூசணி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவை மகிழ்ச்சியான உணர்வைத் தூண்டுவதில் பெரும்பங்கு வகிக்கும் டோபமைன் ஹார்மோனின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

குடைமிளகாய், தக்காளி, கீரைகள், அவகாடோ போன்றவை நம் உடலில் ஆக்ஸிடாசின் ஹார்மோன் சரியாக இயங்குவதற்குத் உதவிபுரிகின்றன.

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்ற பழ வகைகள் எண்டோர்பின் ஹார்மோனின் செயல்பாட்டிற்கு உதவுகிகின்றன.

அட, மகிச்சியைத் தூண்டும் இந்த ஹார்மோன்களை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள், சில பேருக்கு உணவு என்று சொன்னாலோ அல்லது உணவைப் பார்த்தாலோ மகிழ்ச்சித் தானாக வந்துவிடும் அல்லவா?

அந்த வகையில் "நமக்கு சோறு தான் முக்கியம்"-னு சொல்ற category- ல நீங்களும் ஒருத்தங்களா இருக்கிறீங்கனா comment box-ல சொல்லுங்க..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com