பேருதான் மூக்குச்சளி… ஆனால், ஆரோக்கியம் அப்பப்பா! 

நறுவல்லி
நறுவல்லி
Published on

தமிழகத்தில் பரவலாக அறியப்படும் மூக்குச்சளிப் பழம் சித்த மருத்துவத்தில் நறுவல்லி என அழைக்கப்படுகிறது. இந்த பழம் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நவீன உலகில் இயற்கை மருத்துவம் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளதால் மூக்குச்சளி பழத்தின் மீதான ஆராய்ச்சிகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் பதிவில் மூக்குச்சளி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

மூக்குச்சளி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்: 

கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணம், தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு மூக்குச்சளி பழம் ஒரு சிறந்த குளிர்ச்சி தரும் உணவாகப் பார்க்கப்படுகிறது. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் சோர்வை நீக்கி, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. 

குழந்தைகளில் பொதுவாக காணப்படும் குடற்புழுக்கள் பிரச்சனையைப் போக்க மூக்குச்சளி பழம் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இது குடற்புழுக்களை அழித்து மலத்தின் வழியாக வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் உடல்நலம் மேம்பட்டு, அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவும். 

உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு மூக்குச்சளி பழம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கச் செய்கிறது. 

பல ஆண்களை பாதிக்கும் ஆண்மைக் குறைபாடு பிரச்சனையை தீர்க்க, மூக்குச்சளி பழம் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். விந்து நீர்த்துப் போதல் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யும் தன்மை இந்தப் பழத்திற்கு உண்டு. இதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைந்து ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு வழிவகுக்கும். 

மூக்குச்சளி பழத்தில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:
மூல நோயை முறியடிக்கும் கருணைக்கிழங்கு!
நறுவல்லி

மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு மூக்குச்சளி பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இது மலச்சிக்கலைப் போக்கி மூலநோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த பழத்தில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், ரத்த நாளங்களைச் சுத்திகரித்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. 

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை சரி செய்ய மூக்குச்சளி பழம் உதவும். இது கல்லீரலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சரும செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாத்து தோல் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com