மூல நோயை முறியடிக்கும் கருணைக்கிழங்கு!

Karunai kizhangu is a cure for hemorrhoids
Karunai kizhangu is a cure for hemorrhoidshttps://tamilcinemanews.in

ருணைக்கிழங்கு என்றால் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதன் அரிப்புத் தன்மைதான். ஆனால், மூல நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவது இந்தக் கருணைக்கிழங்கைதான். கருணைக்கிழங்கு மூலநோய் மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கருணைக்கிழங்கில் பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மண்ணுக்குள் புதைந்து சுமார் 300 முதல் 3,500 கிராம் வரை எடையுடன் இருக்கும். மேல் தோல் கருமையாகவும், உள்பகுதி மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும் காணப்படும். சிலவற்றில் இளஞ்சிவப்பும் இருக்கும். சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் கருணைக்கிழங்கு ,லேகியம் தயாரிக்க பிரதானமாகப் பயன்படுகிறது.

மூல நோய் என்பது மலச்சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது. மூல நோயில்  உள்மூலம், வெளி மூலம், பவுத்திரம் மூலம் என மூன்று வகையில் உள்ளன. மூல நோயை கட்டுக்குள் வைக்கவும், முழுவதுமாக அகற்றவும் கருணைக்கிழங்கு பேருதவியாக உள்ளது.

கருணைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்: முதலில் கருணைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது அதனுடன் சில கொய்யா இலைகளையும் போட்டு நன்றாக வேக வைத்து, இலைகளை எடுத்துவிட்டு தோலை உரித்து சமைத்தால் அரிப்பு போய்விடும். கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால், இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.

கருணைக்கிழங்கை வேக வைத்து உரித்து எண்ணெயில், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயத்தையும் தக்காளியும் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் போட்டு நன்றாக வதங்கியதும் கிழங்கையும் போட்டு சிறிதளவு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய் பால் சேர்த்து  சிறிது நேரம் மசாலாவுடன் கலக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிட மூல நோய் பாதிப்பிலிருந்து விடுபடலாம். இதையே பிரசவித்த பெண்களுக்கும் கொடுக்கலாம். பிரசவித்த பெண்களுக்கு கருணைக்கிழங்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இன்ட்ரோவெர்ட்டாக இருப்பதன் நன்மைகள் பற்றி தெரியுமா?
Karunai kizhangu is a cure for hemorrhoids

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், உடல் சக்தி அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது. கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து அழகாகவும் ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. கருணைக்கிழங்கு இரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. உடலுக்கு உறுதியளிக்கக் கூடியது. பசியை உண்டாக்கும் இயல்புடையது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச் சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாள்பட்ட காய்ச்சல் குணமாகும். இவ்வளவு சிறப்பு மிக்க, மருத்துவ குணம் கொண்ட மருத்துவப் பொருளை அதன் அரிப்பு தன்மைக்காகவே ஒதுக்கி விடாமல், பக்குவம் செய்து  சமைத்தால் குழந்தைகளும் விரும்பி உண்பர். பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com