இம்புட்டு மல்பெரி அம்புட்டு ஆரோக்கியமா?

Mulberry
Mulberryhttps://www.vivasayam.org

டலுக்கு புத்துணர்ச்சியூட்டும் சுவையான மல்பெரிகள் பொதுவாக சிவப்பு, கறுப்பு, வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இவை சுவையுடனும், ஊட்டச்சத்துடனும் நிரம்பி வழிகின்றன. இவற்றின் மேல் பகுதி முத்துக்கள் பதித்ததுபோல் இருக்கும். பழக் குடும்பத்திலே மிகவும் பழைமையான பழம் இது. சதைப்பற்று மற்றும் ருசியானவை. கறுப்பு மல்பெரி (மோரஸ் நிக்ரா) தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை மல்பெரி (மோரஸ் ஆல்பா) சீனாவை பூர்வீகமாகக் கொண்டவை. இவை பட்டுப்புழு உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகள் பட்டு புழுவிற்கு மிக முக்கியமான உணவாக உள்ளது. சிவப்பு மல்பெரி (மோரஸ் ரப்ரா) கிழக்கு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

மல்பெரியின் நன்மைகள்: மல்பெரியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் கல்லீரலைப் பராமரித்து வலுப்படுத்தும் திறன் கொண்டவை. கல்லீரலுக்கு ஊட்டமளித்து கல்லீரலில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மல்பெரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் திறன் உள்ளதால் உடலில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சரும நோய்களை அகற்றுகிறது.

மல்பெரியில் உள்ள அதிக நீர்ச்சத்து நல்ல செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் மூளையை பராமரித்து ஆரோக்கியமாக வைக்கிறது. மல்பெரி பழங்கள் அற்புதமான கிருமி நாசினி ஆகும். அறுவை சிகிச்சைக்குப் பின் மற்றும் கடுமையான உடல் உழைப்பின்போதும் மல்பெரியை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

மல்பெரியில் வைட்டமின் ‘பி' இருப்பதால் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. தினமும் மல்பெரி பழத்தைச் சிறிதளவு சாப்பிடுவதால் உடலில் உள்ள ஹீமோகுளோபினை அதிகப்படுத்துகிறது. சிறுநீரகங்கள் அல்லது இதயத்தின் செயலிழப்பு காரணமாக நாள்பட்ட வீக்கத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு மல்பெரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வெள்ளை மல்பெரி குளிர்ச்சியை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது. செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், கண் பார்வையை அதிகப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தது. புற்று கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து கேன்சரை கட்டுப்படுத்தும் ஆற்றல் மல்பெரிக்கு உண்டு. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். இரத்தக்கட்டி, பக்கவாதம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் மல்பெரிக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
வேர்களின் முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் ரைசோபியம் என்ன செய்யும் தெரியுமா?
Mulberry

மல்பெரியில் இருக்கும் வைட்டமின் ‘சி' மற்றும் ஃபிளேவனாய்டுகள் காய்ச்சல், சளி, இருமலை குணப்படுத்தும். கெட்ட கொழுப்பைக் குறைத்து நரம்பு தளர்ச்சியைப் போக்கும். தலைமுடி ஆரோக்கியமாகவும், நன்கு வளரவும் உதவும். கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் தலைமுடி இழப்பை தடுத்து மீண்டும் வேரிலிருந்து தலைமுடியை வளரச் செய்யும்

மல்பெரியில் அதிக அளவு ஊட்டச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் 'எ', ‘கே' மற்றும் தாயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன. இதில், ரெஸ்டோவெர்டால் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இதய பாதுகாப்பிற்கும் உதவக்கூடியது.

நன்கு பழுத்த மல்பெரி பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். வெளிரிய நிறம் உடைய பழங்களை சாப்பிடக்கூடாது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் கிடைக்கும் பலன்களை வீட்டில் இருந்தபடியே எளிதில் பெற்றுத்தரும் எளிய மல்பெரியை தொடர்ந்து சாப்பிடுவோம். உடல் ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com