
சாதாரண பாலை விட கொட்டைகளின் (Nuts) பால் ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்தது. ஊட்டச் சத்துக்கள் நிறைந்த கொட்டைகளின் பால் உடலுக்கு பல நன்மைகள் அளிக்கிறது.
ஏன் கொட்டைகளின் பால் சிறந்தது?
சிலருக்கு பாலில் உள்ள லாக்டோஸ் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம் அத்தகையவர்களுக்கு கொட்டை (Nuts) பால் சிறந்தது.
கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளன.
கரையாத கொழுப்புக்கள் உள்ள இப்பால் இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
மாட்டுப் பாலை விட இது செரிமானத்திற்கு மிக நல்லது.
நல்ல எனர்ஜியை தருகிறது. இந்தப் பாலில் லாக்டோஸ் இல்லாததால் மாட்டுப் பாலை உட்கொள்ளும் போது ஏற்படும் வயிறு உப்புசம், ஏற்படாமல் தடுக்கும். லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு கொட்டை (Nuts) பால் சிறந்தது.
இந்த பாலில் கலோரிகள் குறைவாக உள்ளன. பாதாம் பாலில் ஒரு கப்பில் 30 லிருந்து 50 கலோரிகள்தான் உள்ளன. ஆனால் மாட்டுப் பாலில் ஒரு கப்பில் 150 கலோரிகள் உள்ளன. எனவே, எடைக் குறைப்புக்கு கொட்டை (Nuts) பாலே சிறந்தது.
மாட்டுப் பாலில் கரையும் கொழுப்புகள் உள்ளன. ஆனால் கொட்டைகளின் பாலில் கரையாத கொழுப்புகள் உள்ளன. அதிலும் முந்திரி மற்றும் பாதாம் பால் கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.
கொட்டைகளின் பாலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் டி , வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. இதன் வைட்டமின் ஈ சத்து சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு சரும அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
கொட்டைகளின் பாலில் கொலஸ்டிரால் இல்லாததால் இதயத்திற்கு நல்லது. இதயத்திற்கு நண்பனாக செயல்படுகிறது.
இதில் மாட்டுப் பாலில் இருக்கும் அளவுக்கு அதிக கால்சியம் கிடையாது. இருப்பினும் எலும்புகளின் வளர்ச்சிக்கு சிறந்தது.
எனவே பாதாம் வால்நட், ஹேசில் நட் (Hazelnut) , மகடாமியா நட் (Macadamia nut), பிஸ்தா, பெக்கான் (Pecan) மற்றும் பைன் நட் (Pine nut) போன்றவற்றிலிருந்து பால் தயாரித்து குடிப்பது ஆரோக்கியமானது.
எப்படி தயாரிப்பது?
முதல் நாள் இரவே கொட்டைகளை (Nuts) தண்ணீரில் ஊறவைக்கவும்.
காலையில் இவற்றை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை நன்கு வடிகட்டி பால் எடுக்கவும்.
உங்களுக்கு வேண்டுமென்றால் சிறிது தேன் அல்லது பேரீச்சம்பழத் துண்டுகள் சேர்க்கலாம். காபி டீ யை தவிர்த்து. இந்தமாதிரி கொட்டைகளின் பால் அருந்துவது ஆரோக்கியமானது.